பாகிஸ்தானுக்கு தக்காளி நிறுத்தம்
இந்நிலையில், இந்திய விவசாயிகள் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.
அதாவது கர்நாடக மாநிலம் கோலார் விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். கோலாரின் APMC சந்தை ஆசியாவின் இரண்டாவது பெரிய தக்காளி சந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதனால்தான் கோலார் மாவட்டத்தில் விளையும் தரமான தக்காளி, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
900 டன் தக்காளி ஏற்றுமதி
ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் தக்காளி அறுவடை காலம். இந்த நேரத்தில், கோலாரின் தக்காளி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இதில், பாகிஸ்தானுக்கு வழக்கமாக வாரத்திற்கு 800 முதல் 900 டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டது. தக்காளி, மாம்பழம் மற்றும் பிற காய்கறிகளையும் ஏற்றுமதி செய்து வந்தனர்.