ஜம்மு-காஷ்மீரில் கனமழை தொடர்ந்து கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தாவி, செனாப் நதிகளில் நீர்மட்டம் ஆபத்தான அளவைத் தாண்டியுள்ளது.
24
ஜம்மு-காஷ்மீரில் கனமழை; மண்ணுக்குள் புதைந்த பக்தர்கள்
தாவி நதியின் குறுக்கே இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சிக்கியிருந்த 3500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 31 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். கோயிலுக்குச் செல்லும் பாதை சேதமடைந்துள்ளது. பாலங்கள், மின்கம்பங்கள், மொபைல் டவர்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.
34
மீட்பு பணிகள் தீவிரம்
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), ஜம்மு போலீஸ், கோயில் வாரிய ஊழியர்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வைஷ்ணோ தேவி கோயிலுக்கான பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை யாத்ரீகர்கள் பயணத்தைத் தொடங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் சக்கி நதியில் மண் அரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து பதான்கோட் கன்ட் மற்றும் கந்த்ரோரி இடையே ரயில் பாதை பாதிக்கப்பட்டதால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை இந்த நிலச்சரிவை மிகவும் துயரமானது என்று தெரிவித்தார்.
உமர் அப்துல்லாவுடன் அமித்ஷா பேச்சு
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணோ தேவி யாத்திரைப் பாதையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் துயரமானது. இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜி மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஜி ஆகியோருடன் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு உதவ உள்ளூர் நிர்வாகம் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் NDRF குழுவும் அங்கு சென்று கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.