வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்; விரைவில் வெளிவருகிறது அறிவிப்பு!!

First Published | Sep 12, 2024, 6:52 AM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விலை குறைப்பு குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Petrol Diesel

பெட்ரோல், டீசல் விலை

இந்தியாவில் நாளுக்கு நாள் பைக் மற்றும் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி மற்றும் உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.  சர்வதேச அளவில் கஞ்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்பட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதுவே பெட்ரோல்,டீசல் விலை குறையும் என பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

AADHAAR : ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா.! கவலை வேண்டாம்- டிசம்பர் 14ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
 

singapore refined petrolium

கிடு,கிடுவென குறைந்த கஞ்சா எண்ணெய் விலை

பெட்ரோல், டீசல்  விலைகள்  லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலரில் 90 ரூபாயாக இருந்தது.  இந்தியாவில்  ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும்,  ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. 

இந்தநிலையில் கச்சா எண்ணெய் விலை தற்போது 68 ரூபாயாக குறைந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60,  ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார வல்லுநர் சோமவள்ளியப்பன் கூறுகையில், 2024 ஜனவரி பிறகு மிக அதிகளவு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. உக்ரைன் போர், மிடில் ஈஸ்ட் போர் இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

Latest Videos


கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு காரணம் என்ன.?

இப்போது முன் எப்போதும் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக லிபியன் ஆயில் சந்தைக்கு வராமல் இருந்தது. தற்போது வரத்தொடங்கியுள்ளது. சீனாவில் பெட்ரோல், டீசல் தேவை குறைந்துள்ளது, அமெரிக்காவில் தேவை குறையும் என  தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. அதே நேரத்தில் குறைக்கவும் இல்லை. எனவே தற்போது உள்ள நிலையில் விலை குறைக்க முகாந்திரம் உள்ளது. பெட்ரோலை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனமும் நல்ல லாபம் அடைந்துள்ளது.

இரண்டு மாநில தேர்தல் எதிரொலி

லாபத்தை மக்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் இரண்டு மாநில தேர்தல்கள் வர உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு ஏற்படுத்துள்ளது. தற்காலிகமாக குறைந்த விலை போன்று இல்லாமல் வரும் நாட்களிலும் தொடர்ந்து நீடிக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே சந்தை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே அன்றாடம் விலையை நிர்ணயம் செய்யும் என்ற அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள வல்லுநர்கள்  கச்சா எண்ணெய் விலை சரிவின் பலன் மக்களுக்குக் கிடைக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.. இந்தநிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

10 ரூபாய் வரை குறைய வாய்ப்பு

அந்த வகையில் ஒரு லிட்டருக்கு 13 ரூபாய் வரை குறைக்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் குறைந்த பட்சம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை குறைப்பதற்கான திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்புக்காக வாகன ஓட்டிகள் காத்துக்கொண்டுள்ளனர். 

click me!