அவ்வாறு செய்யும் பட்சத்தில், கன்னட மொழியின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், இவ்விசயத்தில் கவனம் செலுத்துமாறு இக் கடிதம் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் புருஷோத்தம் பிலிமலே மேலும் கூறுகையில், “ மருத்துவ குறிப்புகளை கன்டத்தில் எழுதுவது குறித்து ஊடகங்களில் படித்த பிறகு, நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தானாக முன்வந்து, மொழியைக் காப்பாற்ற கன்னடத்தில் மருந்துச் சீட்டு எழுதத் தொடங்குவார்கள் என்று தெரிவிதார். அவர்களில் பலர் கன்னடத்தில் எழுதிய மருந்துச் சீட்டுகளையும் தன்னுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார்.
"மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்கள், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மருந்துச் சீட்டு எழுதும் போது கன்னட மொழிக்கு முன்னுரிமை அளித்தால், கன்னட மொழியின் அடையாளத்தைப் பாதுகாப்பதில் அது முக்கியப் படியாக இருக்கும்," என்று பிலிமலே கூறினார். அதை எளிதாக செயல்படு்த்திவிடமுடியாது என்றாலும், மாநில அரசின் உறுதியான நிலைப்பாடு இதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்தார்.