ரயில்களில் பணத்தைத் திரும்பப் பெறும் விதியில் மாற்றம்! ஐஆர்சிடிசி அறிவிப்பு!

First Published | Dec 30, 2024, 1:14 AM IST

IRCTC Refund rules: ரயில்கள் தாமதமானால் டிக்கெட் பணத்தைத் திருப்பி வழங்கும் விதியை ரயில்வே திரும்பப்பெற்றுள்ளது. ஐஆர்சிடிசி இந்த வசதியை நிறுத்திவிட்டது. முன்னதாக, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ரயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது.

IRCTC Refund rules

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். குறைவான கட்டணத்தில் வசதியாகவும் பயணிக்க முடிகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் ரயில் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் ரயில் பயணம் தொடர்பாக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. அவ்வகையில் ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கை ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Railway Refund rules

இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி, பயணிகள் வசதிகளை அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு தொடங்கும் முன், ஐஆர்சிடிசி ஒரு முக்கிய முடிவை எடுத்து ஒரு வசதிக்கு முடிவுகட்டியுள்ளது. ரயில்வேயின் இந்த முடிவு  பல பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Railway refund

ரயில்கள் தாமதமானால் டிக்கெட் பணத்தைத் திருப்பி வழங்கும் விதியை ரயில்வே திரும்பப்பெற்றுள்ளது. ஐஆர்சிடிசி இந்த வசதியை நிறுத்திவிட்டது. முன்னதாக, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ரயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது.

Refund for delayed trains

இந்த மாற்றத்தின்படி, இனி ரயில்கள் தாமதமானால், பயணிகளுக்கு எந்தவிதமான கட்டணமும் திருப்பித் தரப்படாது. ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு எந்த நிவாரணமும் கிடையாது என்பது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

Private trains Refund rules

கடந்த சில வருடங்களாக, தாமதமாகும் ரயில்களுக்காக பணத்தைத் திரும்பக் கொடுப்பதால் ரயில்வேக்கு அதிக பணம் செலவாகிறது. 2022-23ஆம் ஆண்டில், ரயில்வே சுமார் ரூ.7.74 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தது. இந்த ஆண்டு ரூ.15 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு பணத்தைத் திரும்பப்பெறும் முறையானது பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டால் ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது இந்த வசதி முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது.

Indian Railways Train Delay

ஐஆர்சிடிசி எடுத்த இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ரயில்வே பயணிகள், குறிப்பாக தனியார் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இதுபோன்ற நிதி நிவாரணம் எதுவும் கிடைக்காது. இந்த மாற்றம் ரயில் பயணிகளுக்கு சவாலாக இருக்கும். குறிப்பாக ரயில் நீண்ட நேரம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்துக்கு எந்த இழப்பீடும் இல்லை. இந்தப் புதிய விதி தனியார் ரயில்களுக்கு மட்டும்தான். அரசு ரயில்கள் தாமதமானால் பணத்தைத் திரும்பப் பெறும் வசதி இன்னும் தொடர்கிறது.

Latest Videos

click me!