பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது, ஒரு நபர் தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்து அலறி கூச்சலிட்டுள்ளார். பிடிபட்ட நபரிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட பெண்களின் ரகசிய வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையை விட பெங்களூருவில் தமிழர்கள் அதிகளவில் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய முன்னணி நகரங்களில் இன்போசிஸ் நிறுவனம் செயல்படுகிறது.
24
இன்போசிஸ் ஐடி நிறுவனம்
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையில் இருந்து ஒரு நபர் போனில் தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்த அந்த பெண் உடனே அலறி கூச்சலிட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர், தன்னை மன்னித்து விடுமாறும் இனிமேல் இதுபோன்ற தவறு செய்ய மாட்டேன் என்று கெஞ்சியுள்ளார். இப்படி செய்ய மாட்டேன் என்றும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார். எனினும், அந்த பெண் ஊழியர் சத்தம் போட்டு சக ஊழியர்களை வரவழைத்துள்ளார்.
34
பெண்களின் ரகசிய வீடியோ காட்சிகள்
பிடிப்பட்ட நபர் ஆந்திராவைச் சேர்ந்த நாகேஷ் என்பதும் அவரது செல்போனில் 30க்கும் மேற்பட்ட வீடியோ இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிடிப்பட்ட நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகேஷ் மாலி (28) என்பதும் பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சேர்ந்ததும் தெரிய வந்துள்ளது. அவருடைய செல்போனில் நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 30க்கும் அதிகமான பெண்களின் ரகசிய வீடியோ காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கோரி பிரச்சனையை செய்ய நிறுவனம் முயற்சித்த போது புகாரளித்த பெண்ணின் கணவர் பிரச்சனை செய்ததை அடுத்து விவகாரம் காவல் நிலையத்திற்கு சென்றது. இதனை அடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இன்போசிஸ் நிறுவனம் அந்த இளைஞரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. பிரபல ஐடி நிறுவனத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.