IRCTC : இனி அனைத்தும் ஒரே செயலியில்! ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்!

First Published | Nov 5, 2024, 4:03 PM IST

இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக புதிய 'சூப்பர் ஆப்' ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஒரே செயலியில் அனைத்து சேவைகளையு பெறலாம். இந்த செயலி எப்போது அறிமுகமாக உள்ளது தெரியுமா?

IRCTC Super App

ஆசியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் பெரும்பாலான மக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். பயனிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. 

ரயில்களில் பயணம் செய்ய, டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். நேரடியாக ரயில் நிலையங்களுக்கு சென்றும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லனிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆன்லைனில் ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கு பயன்படுத்தப்படுகிறது. PNR நிலையை அறியவும் நேரலை நிலையைப் பயிற்சி செய்யவும் வெவ்வேறு செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. 

IRCTC Super App

இந்த சிக்கல்களை போக்கும் வகையில் IRCTC புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. IRCTC Super APP என்ற பெயரில் இந்த புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்.அனைத்து வகையான ரயில் சேவைகளும் இந்த செயலி மூலம் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tap to resize

IRCTC Super App

டிக்கெட் முன்பதிவு, PNR நிலை மற்றும் ரயில்வே தொடர்பான கண்காணிப்பு நிலை ஆகியவற்றுக்கு பல்வேறு செயலிகளை பயன்படுத்துவது மிகவும் கடினமாகி வருகிறது. இந்த சிக்கலை சமாளிக்க இந்திய ரயில்வே புதிய சூப்பர் ஆப் ஒன்றை கொண்டு வரவுள்ளது.

எனவே இனி டிக்கெட் முன்பதிவு, PNR நிலை மற்றும் ரயில் கண்காணிப்பு ஆகிய விவரங்களை ஒரே செயலியில் தெரிந்துகொள்ளலாம். மேலும், ரயிலில் பயணம் செய்யும் போது உணவை ஆர்டர் செய்வதற்கும் இந்த பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும். , பிளாட்பார்ம் டிக்கெட் முதல் பொது டிக்கெட் வரை ஆன்லைன் முறையில் வாங்கலாம். இந்த சூப்பர் ஆப் டிசம்பர் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது..

IRCTC Super App

தற்போது 10 கோடிக்கும் அதிகமானோர் IRCTC Rail Connect செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளனர். இது தற்போது மிகவும் பிரபலமான ரயில்வே ஆப் ஆகும். Rail Madad, UTS, Satark, TMC-Direction, IRCTC Air, Portread போன்ற பயன்பாடுகளும் பொதுமக்களுக்கு ரயில்வே சேவைகளை வழங்குகின்றன. இந்த அனைத்து சேவைகளையும் ஓகே சூப்பர் ஆப் மூலம் வழங்க ரயில்வே தயாராகி வருகிறது. இதன் மூலம் ரயில் பயணிகள் ஒரே செயலியில் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

click me!