ரயில் டிக்கெட்டில் தேதி அல்லது பெயரை மாற்ற வேண்டுமா? ரொம்ப சிம்பிள்!

Published : Nov 30, 2024, 07:57 AM IST

இந்திய ரயில்வே (Indian Railways) ரயில் டிக்கெட்டுகளில் தேதி அல்லது பெயரை மாற்றும் வசதியை வழங்குகிறது. இந்த வசதியை பயன்படுத்த தகுதியான டிக்கெட்டுகள் எவை, தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்.

PREV
18
ரயில் டிக்கெட்டில் தேதி அல்லது பெயரை மாற்ற வேண்டுமா? ரொம்ப சிம்பிள்!
Indian Railways

 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது தவறுகள் ஏற்படுவது சகஜம். குறிப்பாக அவசரமாக டிக்கெட் புக் செய்யும்போது. ஏதேனும் தவறு செய்துவிடக்கூடும். நீங்கள் தவறான தேதியில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், நீங்கள் அதை ரத்து செய்ய வேண்டியதில்லை. இந்திய ரயில்வே பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில் தேதியை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. தேவைப்பட்டால் வேறு ஒருவருக்கு டிக்கெட்டை மாற்றவும் அனுமதிக்கிறது.

28
Ticket booking rules

இந்திய ரயில்வே பயணிகளின் தேவைக்கு ஏற்பட பல சேவைகளை வழங்குகிறது. அதன்படி, உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் RAC டிக்கெட்டுகளில் பயணத் தேதியை மாற்ற முடியும். சில நிபந்தனைகளின் கீழ் நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு டிக்கெட்டை மாற்றலாம். கல்வி அல்லது சுற்றுலா குழுக்களுக்கான குழு டிக்கெட்டுகளையும் மாற்றலாம்.

38
Indian Railways Reservation

ஆனால், இந்த சேவைகளை பயன்படுத்துவதற்கு சில விதிமுறைகளும் உள்ளன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இந்த வசதிகள் கிடைக்கும். ரயில்வே முன்பதிவு கவுண்டரில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே தேதி அல்லது பெயர் மாற்றம் செய்ய முடியும். IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலிகள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் தேதி அல்லது பெயரை மாற்ற முடியாது.

48
Change date and name in booked ticket

ரயில் டிக்கெட் இன்னொரு நபருக்கு மாற்றுவதை ரயில்வே அனுமதிக்கிறது. ஆனால் இந்த சேவை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே. உங்கள் பெயரில் முன்பதிவு செய்த டிக்கெட்டை பெற்றோர், உடன்பிறந்தவர்கள், குழந்தைகள், மனைவி / கணவர் ஆகியோர் பெயரில் மாற்றிக்கொடுக்கலாம்.

58
Train ticket change

கல்விச் சுற்றுலா போன்றவற்றுக்கு குழு டிக்கெட் புக் செய்திருந்தால், குழு உறுப்பினர்களிடையே டிக்கெட்டை பரிமாற்றம் செய்யப்படலாம். இதற்கு முறையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

68
Railways Ticket Booking

டிக்கெட்டில் தேதி அல்லது பெயரை மாற்றுவதற்கு அருகில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு கவுண்டரை அணுகலாம். பெயர் மாற்றத்திற்கு, முன்பதிவு செய்த ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்பாக நிலையத்தை அணுக வேண்டும். தேதி மாற்றத்திற்கு, 48 மணிநேரத்திற்கு முன்பே அணுக வேண்டும்.

78
Transfer ticket to family members

முழுமையாக நிரப்பிய விண்ணப்பத்துடன் புக் செய்த அசல் டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும். திருத்தம் செய்வதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மாற்றங்களைச் செய்ய குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். புதிய தேதி அல்லது பெயர் உங்கள் டிக்கெட்டில் இருக்கை கிடைப்பதைப் பொறுத்து புதுப்பிக்கப்படும்.

88
IRCTC rules

இனி தவறான தேதியில் அல்லது தவறான பெயரில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டால், கவலைப்பட வேண்டியதில்லை. ரயில்வே வழங்கும் எளிய வழிமுறைகள் மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டை எளிதாக மாற்றலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories