இன்று நவம்பர் 29, 2024 வெள்ளியன்று தொடங்கியுள்ள இந்த விற்பனையானது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி, 2024 திங்கட்கிழமை இரவு 11:59 வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. விமான பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு சிறப்பான செய்தியாகவே இது அமைந்துள்ளது. ஏர் இந்தியாவின் இந்த பிளாக் பிரைடே விற்பனையானது, உள்நாட்டு விமானங்களில் சுமார் 20 சதவிகிதம் மற்றும் சர்வதேச விமான வழித்தடங்களில் சுமார் 12 சதவிகிதம் வரை கட்டணக் குறைப்புகளைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த சலுகை காலகட்டத்தில் விமான பயணிகள் செய்யும் முன்பதிவுகள் வருகின்ற 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை மேற்கொள்ளக்கூடிய பயணத்தை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அல்லது வட அமெரிக்கா இடையேயான விமானங்களுக்கான நீட்டிக்கப்பட்ட சலுகை, அக்டோபர் 30, 2025 வரை கிடைக்கும்.