போர்டிங் ஸ்டேஷன் மாற்றம்! ரயில் பயணிகளுக்கு IRCTC சொன்ன குட்நியூஸ்!

Published : Nov 28, 2024, 03:15 PM IST

இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக போர்டிங் ஸ்டேஷன் மாற்றக் கொள்கையை புதுப்பித்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
போர்டிங் ஸ்டேஷன் மாற்றம்! ரயில் பயணிகளுக்கு IRCTC சொன்ன குட்நியூஸ்!
Boarding Station Change

ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பயணிகளின் வசதியை கணிசமாக மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே தனது போர்டிங் ஸ்டேஷன் மாற்றக் கொள்கையை புதுப்பித்துள்ளது. அதன்படி தற்போது, ​​ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் பயணிகள் தங்கள் போர்டிங் பாயிண்டை மாற்றிக்கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளனர். 

25
Boarding Station Change

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அமைப்பின் மூலம் டிக்கெட் வழங்கும் செயல்முறையை சீரமைக்கவும் மேம்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்தப் புதிய கொள்கையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கூடுதல் கட்டணம் செலுத்தாமல், தேவைப்பட்டால், பயணிகள் தங்கள் போர்டிங் பாயிண்டை பலமுறை மாற்றிக்கொள்ள முடியும்..

இருப்பினும், ரயில் புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் போர்டிங் பாயிண்ட் மாற்றப்பட்டால், டிக்கெட்டைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை பயணிகள் இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

35
Boarding Station Change

போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவதற்கான செயல்முறை பயனரின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடி இணையதளத்திலேயே பயணிள் இந்த மாற்றத்தை செய்து கொள்ளலாம். இந்திய ரயில்வேயின் இந்த முயற்சி, பயணிகள் சேவை மற்றும் திருப்தியை மேம்படுத்துவதற்கான எடுக்கப்பட்டுள்ளது.

ரயில். புறப்படுவதற்கு 4 மணிநேரம் வரை போர்டிங் ஸ்டேஷனை எளிதாக மாற்றுவது அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பயணத் திட்டங்களில் திடீர் மாற்றங்களைச் சந்திக்கும் பயணிகளின் தேவைகளுக்கும் உதவுகிறது.

45
Boarding Station Change

எனவே போர்டிங் ஸ்டேஷன் மாற்றம் குறித்த இந்திய ரயில்வேயின் புதிய கொள்கை நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகளுக்கு வரவேற்கத்தக்க முயற்சியாகும். இந்த அப்டேட், இந்திய ரயில்வேயின் மில்லியன் கணக்கான பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கிறது.

55
Boarding Station Change

போர்டிங் ஸ்டேஷனை எப்படி மாற்றுவது?

முதலில் ஐஆர்சிடிசியின் திகாரப்பூர்வ இணையதளமான irctc.co.in ஐப் பார்வையிட வேண்டும்
முகப்புப் பக்கத்தில், உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைக

அடுத்த பக்கத்தில், My Account -> My Transactions-> Booked Ticket History-ai பார்வையிடவும்

இந்தப் பக்கத்தில், நீங்கள் போர்டிங் ஸ்டேஷனை மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, 'Change Boarding Point' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைக்கு இடையே உள்ள நிலையங்களின் பட்டியலுடன் புதிய சாளரம் தோன்றும்.

நீங்கள் விரும்பும் போர்டிங் பாயிண்டை தேர்வு செய்யவும்

புதிய பக்கத்தில், நிலைய அமைப்பு உறுதிப்படுத்தல் கேட்கும்,

உங்கள் டிக்கெட்டின் போர்டிங் புள்ளியை மாற்ற 'OK' என்பதைக் கிளிக் செய்யவும்

போர்டிங் நிலையம் வெற்றிகரமாக மாற்றப்பட்டால் ஒரு செய்தி தோன்றும்
முன்பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு புதுப்பிக்கப்பட்ட போர்டிங் பாயிண்ட் தொடர்பான மற்றொரு செய்தி அனுப்பப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories