ரயிலில் லோயர் பெர்த் யாருக்கு கிடைக்கும்? ரயில்வேயின் புதிய விதிகள்!

First Published | Nov 26, 2024, 8:08 AM IST

Indian Railways Lower Berth Rules: மூத்த குடிமக்களுக்கு ரயில்வேயில் லோயர் பெர்த்தை முன்பதிவு செய்ய முடியும். அதற்காக ரயில்வே புதிய விதிகளைப் பின்பற்றுகிறது. அதன்படி ரயில் டிக்கெட் எப்படி முன்பதிவு செய்யப்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

Indian Railways

இந்திய இரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஒவ்வொரு பயணிகளின் தேவைகளையும் கவனித்துக்கொள்ள ரயில்வே தன்னால் இயன்றவரை முயற்சிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்வே மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அந்த வகையில் பெர்த் ஒதுக்கீட்டிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

Lower berth allocation

மூத்த குடிமக்களின் பயணத்தை எளிதாக்குவதற்காக அவர்களுக்கு கீழ் பெர்த்களை முன்பதிவு செய்யும் வாய்ப்பை ரயில்வே வழங்குகிறது. இது குறித்து IRCTC விளக்கம் அளித்துள்ளது. தனது மாமாவுக்கு கால்களில் பிரச்னை இருந்ததால் கீழ் பெர்த் புக் செய்ததாகவும், ஆனால் ரயில்வே அவருக்கு மேல் பெர்த் கொடுத்ததாகவும் பயணி ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

Tap to resize

Lower berths for Senior citizens

பயணியின் ட்வீட்டுக்கு பதிலளித்த ரயில்வே, பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருக்கை இருப்பதைப் பொறுத்துதான் லோயர் பெர்த் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் முன்பதிவு செய்தால் மட்டுமே, லோயர் பெர்த் கிடைக்கும்.

How to book lower berth

பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு லோயர் இருக்கைகள் இருக்கும்போது மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகள் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் கிடைக்கும்.

Lower berth in Trains

பொது ஒதுக்கீட்டில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இருக்கை ஒதுக்கீட்டில் எந்தத் தலையீடுயும் கிடையாது. ஆனால், நீங்கள் TTE வரும்போது லோயர் பெர்த்துக்கு மாற்றிக்கொள்ள கோரலாம். பேச்சுவார்த்தை லோயர் பெர்த் கிடைத்தால் அதற்கு மாறிக்கொள்ளலாம்.

Latest Videos

click me!