மலிவு விலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு! 100 ரூபாய் வரை சேமிக்கலாம்!!

First Published | Nov 24, 2024, 12:12 PM IST

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது நிறைய பணத்தை மிச்சப்படுத்தக்கூடிய ஒரு வழி இருக்கிறது. ஐஆர்சிடிசி வழங்கும் வசதியை பயன்படுத்தி மலிவு விலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

Indian Railways

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். இந்திய ரயில்வே நமது நாட்டின் உயிர்நாடி என்பதில் சந்தேகமில்லை. இந்திய இரயில்வேயில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து தங்கள் இலக்குகளை அடைகின்றனர். ரெயில்வே கவுன்டர்களில் மணிக்கணக்கில் நின்று காத்திருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால், டிஜிட்டல் மயமாகி வரும் இந்தியாவில், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது எந்த ரயிலிலும் எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

Cheapest online train tickets

இன்று, இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்கள் மொபைல் செயலிகளில் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை வழங்குகின்றன. இந்த தனியார் நிறுவனங்களின் செயலிகளில் கோடிக்கணக்கான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். தனியார் செயலிகளில் பல்வேறு கட்டணங்கள் காரணமாக, டிக்கெட்டின் விலை மிகவும் அதிகமாகிறது. ஆனால், மலிவு விலையில் ரயில் டிக்கெட்டுகளை புக் செய்ய ஒரு வழி உள்ளது.

Tap to resize

Train ticket booking

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் மலிவான விலையில் முன்பதிவு செய்யலாம். IRCTC வழங்கும் இந்த ஆன்லைன் சேவையைப் பயன்படுத்த முகவர் சேவை கட்டணம், பேமெண்ட் கேட்வே கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

IRCTC Website

அதேசமயம், தனியார் நிறுவனங்களின் ஆப்ஸ் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, முகவர் சேவை கட்டணம், பேமெண்ட் கேட்வே கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் விலையுடன் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

IRCTC app

தனியார் நிறுவனங்களின் ஆப்ஸ் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, அதிக பணம் செலுத்தி டிக்கெட் வாங்குபவர்கள் இனி ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் ரூ.100க்கு மேல் சேமிக்கலாம். பயணத்தின் தூரம், தேர்வு செய்யும் கோச் ஆகியவற்றைப் பொறுத்து சேமிக்கும் தொகை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

Latest Videos

click me!