மரண அடி கொடுத்த பாஜக! இனி சரத் பவார், சஞ்சய் ராவத், பிரியங்கா எம்.பி.யாக வழியே இல்லை!

First Published | Nov 24, 2024, 11:13 AM IST

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சரத் பவார், பிரியங்கா சதுர்வேதி, சஞ்சய் ராவத் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

Maharashtra Election Results 2024

மகாராஷ்டிரத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி மோசமான தோல்வியைச் சந்திதுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Rajya Sabha MPs

சரத் பவார், பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் ஏப்ரல் 3, 2020 அன்று ராஜ்ய சபா உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சஞ்சய் ராவத் ஜூலை 2022 இல் ராஜ்ய சபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத் பவார் மற்றும் பிரியங்கா சதுர்வேதி இருவரின் பதவிக்காலம் ஏப்ரல் 3, 2026 இல் முடிவடைகிறது. ராவத்தின் பதவிக்காலம் ஜூலை 22, 2028 அன்று முடிவடைகிறது.

Tap to resize

Priyanka Chaturvedi

என்சிபி (எஸ்பி) மற்றும் சிவசேனா (யுபிடி) ஆகிய இரண்டு கட்சிகளும் போதுமான பலம் இல்லாத நிலையில், ஒரு மாநிலங்களவை எம்.பி.யைக்கூடத் தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை.

Sharad Pawar

முன்னதாக, சரத் பவார் மாநிலங்களவை உறுப்பினராக இதுவே தனது கடைசி பதவிக்காலம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!