வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.
priyanka gandhi
வயநாடு இடைத்தேர்தலில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது அறிமுகத் தேர்தலிலேயே தனது சகோதரர் ராகுல் காந்தியை மிஞ்சிவிட்டார்.
priyanka gandhi
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்று 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். பிரியங்கா காந்தி 404,619 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளர் சத்யன் மொகேரி மற்றும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோருக்கு எதிராகப் போட்டியிட்ட பிரியங்கா 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருக்கிறார்.
priyanka gandhi
முன்னதாக பிரியங்காவின் சகோதரர் ராகுல் காந்தி, 2024 மக்களைவைத் தேர்தலில் வயநாட்டிலும் உ.பி.யின் ரே பரேலியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் வயநாடு தொகுதியை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாட்டிற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
Priyanka Gandhi
கேரளாவின் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் - யுடிஎப் வேட்பாளர் ராகுல் மம்கூடத்தில் 18,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம், செல்லக்கரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எல்.டி.எப் கட்சியின் யு.ஆர்.பிரதீப் வென்றுள்ளார்.