BJP Maharashtra: முதல்வராகிறாரா தேவேந்திர பட்னவிஸ்? மகாராஷ்டிராவில் பாஜக வெற்றிக்கு காரணம் என்ன?

First Published | Nov 23, 2024, 2:18 PM IST

2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஹரியானாவில் அக்கட்சியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, வந்திருக்கும் இந்த வெற்றி தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இந்த வெற்றியைப் பெற முக்கியக் காரணமாக இருந்த அம்சங்கள் என்னென்ன என்று அறியலாம்.

Maharashtra Assembly Election Results 2024

2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஹரியானாவில் அக்கட்சியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, வந்திருக்கும் இந்த வெற்றி தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இந்த வெற்றியைப் பெற முக்கியக் காரணமாக இருந்த அம்சங்கள் என்னென்ன என்று அறியலாம்.

Maharashtra BJP Alliance

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி: மகாராஷ்டிராவில், பாஜக மீண்டும் தனது கூட்டணியைத் திறமையாக உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) பிரிவு இரண்டும் முக்கிய அங்கங்களாக உள்ளன. இந்தக் கூட்டணி எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணியை பிளவுபடுத்தி, பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

OBC politics

மகாராஷ்டிராவில் ஓபிசி வாக்குகள்: மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை போன்ற சர்ச்சைகளுக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் தனது ஓபிசி ஆதரவு தளத்தை மீட்டெடுக்க பாஜக தீவிரமாக முயன்றது. மாலிகள், தங்கர்கள் போன்ற முக்கிய OBC சமூகங்களை இலக்காகக் கொண்ட உத்திகளை உருவாக்கியது. அவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய தீவிரப் பரப்புரை செய்தது.

Maharashtra BJP Leadership

முதல்வகிறாரா தேவேந்திர பட்னவிஸ்?: மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸின் தலைமை கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதல்வராகவும் துணை முதல்வராக பதவி வகித்த பட்னவிஸ், உள்ளூர் பிரச்சனைகளை தீர்த்து, கட்சி ஒற்றுமையை நிலை நாட்டினார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் என்சிபியின் அஜித் பவார் பிரிவுடன் இணைந்து வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு மற்றும் முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். பாஜகவின் வலுவான பிரச்சார உத்தியில் பட்னவிஸ் முக்கியமானவராக செயல்பட்டார்.

Maharashtra Promises

மகாராஷ்டிராவில் மாதவ் ஃபார்முலா: மகாராஷ்டிராவில் பாஜகவின் 'மாதவ் ஃபார்முலா' ஓபிசி ஆதரவு தளத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவியது. குறிப்பாக மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை போன்ற சவால்களைச் சமாளிக்க இந்த அணுகுமுறையை பாஜக கையில் எடுத்தது. மாலிகள், தங்கர்கள், வஞ்சாரிகள் போன்ற செல்வாக்கு மிக்க OBC சமூகங்களை குறிவைத்து பாஜக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான வாக்குறுதிகளை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை, பாஜகவுக்கு ஓபிசி வாக்குகள் கிடைப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்கர் சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரி வருகிறது. இந்த கோரிக்கையை நிவர்த்தி செய்வதாக பாஜக உறுதியளித்துள்ளது.

Latest Videos

click me!