பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட போலி கணக்குகளை வைத்து தட்கல் டிக்கெட் எடுப்பதாகவும், தட்கலில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாகவும் ரயில்வேக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன.
இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் அடிப்படையிலான வெரிபிகேஷன் செய்யப்படும் என ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்மூலம் குளறுபடிகள் செய்து தட்கல் டிக்கெட் எடுப்பது தவிர்க்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
மோசடியாளர்களை தவிர்க்க முடியும்
அதாவது தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டால் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு ஒரு ஓபிடி எண் வரும். அந்த எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.
கவுன்ட்டர்களில் தட்கல் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இந்த ஆதார் வெரிபிகேஷன் மூலமாக மோசடியாளர்களை, குளறுபடிகளை தவிர்க்க முடியும் என்பது ரயில்வேயின் கருத்தாக உள்ளது.