Indian Navy conducts missile test: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பினாமி குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதல் நாட்டு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
24
Indian Navy INS Surat
பயங்கரவாதிகளின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்து விடுகிறது. இதனால் அந்த நாட்டுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுடன் ஏற்படுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஒருவரையும் விட மாட்டோம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் துரத்திப் பிடித்து கற்பனை செய்ய முடுயாத தண்டனை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய கடற்படை நடுக்கடலில் இருந்து ஏவுகணை சோதனை செய்துள்ளது. அதாவது உள்நாட்டு ஏவுகணை அழிப்பானான ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
44
Indian Navy
''போர்க்கப்பலின் மேற்பரப்பில் பாய்ந்து சென்று கொண்டிருந்த வேகமான, தாழ்வாகப் பறக்கும் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக சுட்டு வீத்தியது. இது நமது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் மற்றொரு மைல்கல்லாக உள்ளது'' என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஏப்ரல் 24 முதல் 25 வரை கராச்சி கடற்கரையிலிருந்து தரையிலிருந்து தரை பகுதியை நோக்கி ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து செய்திகள் வெளியான நிலையில், இந்தியா இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2029ம் ஆண்டு புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கராவதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. அதேபோன்று மீண்டும் ஒரு சர்ஜிக்கல் அட்டாக் நடத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகத் தான் போர்க்கப்பலில் இருந்து சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.