உஷார் நிலையில் இந்திய நகரங்கள்
பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வருவதால், பல இந்திய நகரங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், பதான்கோட், உதம்பூர், புது டெல்லி, ஜலந்தர் மற்றும் சிர்சா உள்ளிட்ட பல இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் குறுகிய தூர ஃபத்தா-1 ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இருப்பினும், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அத்துமீறலை முறியடித்து, உள்வரும் அனைத்து ஏவுகணைகளையும் திறம்பட தடுத்து சுட்டு வீழ்த்தியது.