இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் எந்த மாநிலத்தில் இயங்கும்? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
India's first hydrogen train: இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். நாட்டில் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் டீசலில் இயங்கும் ரயில்கள், மின்சாரத்தில் இயங்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில இடங்களில் நீராவியில் இயங்கும் ரயிலும் இயக்கப்படுகிறது.
24
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்
இந்நிலையில், இந்தியாவில் விரைவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஹைட்ரஜன் ரயிலுக்கு பெட்ரோல், டீசல் தேவையில்லை. சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசும் ஏற்படாத வகையில் பசுமை ரயில்களாக இவை இருக்கும். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் டெல்லி பிரிவில் 89 கிமீ தூரம் உள்ள ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) தயாரித்துள்ளது இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஹைட்ரஜன் ரயிலை பொறுத்தவரை மணிக்கு 140 கிமீ முதல் 200 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 1500 ஹார்ஸ் பவர் குதிரை சக்தி கொண்ட திறன் கொண்டவையாக இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளில் 500 முதல் 600 வரையிலான குதிரைத்திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களே இயக்கப்படும் நிலையில், இந்தியாவில் 1500 குதிரைத்திறன் கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. ஒரு ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை உருவாக்க 80 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மொத்தம் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
44
ஹைட்ரஜன் ரயில் இயங்கும் நாடுகள்
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரயிலில் 10 ரயில் பெட்டிகள் இருக்கும். மற்ற நாடுகளில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்களில் குறைவான பெட்டிகளே இருக்கும் நிலையில், இந்திய ரயில்களில் அதிக பெட்டிகள் உள்ளன. உலகளவில் இப்போது இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.