அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடனான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், இந்தியா வாஷிங்டனில் ஒரு புதிய நிறுவனத்தை பரப்புரைக்காக (ஐ.டி விங்) பணியமர்த்தியுள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம், முன்னாள் செனட்டர் டேவிட் விட்டர் தலைமையிலான மெர்குரி பொது விவகாரங்களை தனது இராஜதந்திர முயற்சிக்களை வலுப்படுத்த சமீபத்தில் நியமித்துள்ளது. பாகிஸ்தான் நீண்ட காலமாக ஐடி விங்கிற்காக பணத்தை செலவழித்து வருகிறது. அதனால்தான் இந்தியா இந்த முடிவை தாமதமாக எடுத்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளது
பிசினஸ் டுடேவின் தகவல்படி, வெளிநாட்டு முகவர் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, மெர்குரிக்கும், இந்திய தூதரகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இந்த மாதம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2025 ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து 2025 நவம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும்.அதுவரை இந்தியா இந்த ஐடி விங் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் $75,000 கட்டணம் செலுத்தும். அதாவது, ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மொத்தம் $225,000 கட்டணம் செலுத்தப்படும். அமெரிக்காவுடன் தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழ்நிலையில் முக்கிய சேவைகளை வழங்கும் பணி இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.