மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகையின்போது பல்வேறு அரசியல் சந்திப்புகளில் பங்கேற்றார். பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் உரையாற்றிய அவர், உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் லட்சியம் என்றும், 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
பூத் கமிட்டி மண்டல மாநாட்டிற்காக திருநெல்வேலி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
210
பழனிசாமியை முதல்வராக்குவது நமது கடமை
அமித்ஷா தலைமையில் நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தமிழகத்தில் ஆட்சியில் அமர வைக்க வேண்டியது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தொண்டரின் பொறுப்பு என்று தெரிவித்தார்.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றிக்காகவும் நாம் உழைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
310
தவெக - தேமுதிக கூட்டணி?
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் விஜய், விஜயகாந்த்தை அண்ணன் எனக் குறிப்பிட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் விஜய்யை தம்பி எனக் குறிப்பிட்டு இருவரின் உறவு நீண்டகாலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
410
இலங்கை முன்னாள் அதிபர் கைது
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு நிதியை தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 2023 இல் இங்கிலாந்து சென்ற பயணம் குறித்த விசாரணைக்குப் பின்னர் கைது நடந்தது.
510
தெரு நாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம்
டெல்லி தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் நாய் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் தெருவிலேயே விடலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதேவேளையில் ஆக்ரோஷமான, ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும்
தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
610
நாடாளுமன்றத்துக்குள் மர்ம நபர்
நாடாளுமன்றத்துக்குள் மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக நுழைந்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் இன்று காலை 6:30 மணியளவில் நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத ஒரு நபர், ரயில் பவன் பகுதியில் உள்ள மரத்தின் உதவியுடன் நாடாளுமன்ற மதிலை ஏறி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கருடா வாசல் (Garuda Gate) வரை சென்றார்.
710
பீகார் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்
பீகார் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் குடியிருப்புக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை சமர்ப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 35 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
810
ஸ்டாலினை ரவுண்டு கட்டிய அமித் ஷா!
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அமித் ஷா, உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் லட்சியம் என்றும், 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
910
அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா!
உக்ரைன் போருக்குப் பின்னர் இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு 25% வரி விதித்துள்ளது, இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1010
பெட்ரோல், டீசல் இலவசம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பெட்ரோல் நிலையத்தில் இலவச பெட்ரோல், டீசல் சலுகை அறிவிக்கப்பட்டதால், ஏராளமான வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.