ஆகஸ்ட் 15, 2024-ல் கொண்டாடப்படுவது 77வதா? அல்லது 78வது சுதந்திர தினமா?

First Published | Aug 14, 2024, 11:56 AM IST

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட “ஹர் கர் திரங்கா” பிரச்சாரத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.
 

எதிர்வரும் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பார்வையை முன்னிலைப்படுத்த ‘விக்சித் பாரத்’ என்ற அரசாங்கத்தின் கருப்பொருளுடன் இந்த சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திரதினம் நெருங்கும்போதும் நம்மில் பலருக்கும் ஒரு குழப்பம் ஏற்படலாம். இது, 77வது சுதந்திரதினமா? அல்லது 78வது சுதந்திர தினமா என்ற கேள்வி எழலாம்?
 

77வது சுதந்திர தினமா? அல்லது 78வது சுதந்திர தினமா?

ஆங்கிலேயர் ஆட்சியின் 200 ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு 1947 ஆகஸ்ட் 15 அன்று பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் ஆண்டு விழா ஆகஸ்ட் 15, 1948 அன்று கொண்டாடப்பட்டது. இது சுதந்திரத்தின் ஒரு முழு ஆண்டைக் குறிக்கிறது. எனவே, 2024-ம் ஆண்டுக்குள், நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் நிறைவடையும். இது 77 வது ஆண்டு விழா என்று பலர் குறிப்பிட காரணமாக உள்ளது.

Latest Videos


இருப்பினும் 1947 ஆகஸ்ட் 15 முதல் கணக்கிட்டால், 2024ம் ஆண்டு தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும்போது, 78வது கொண்டாட்டத்தை குறிக்கிறது. எனவே, இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை 2024ல் கொண்டாடும் என்பதே துல்லியமானது. இது 1947 முதல் சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும். இந்த வேறுபாடு, நாடு விடுதலை அடைந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன மற்றும் எத்தனை சுதந்திர தினங்கள் கொண்டாடப்பட்டது என்பதை தெளிவுபடுத்த உதவுகிறது.
 

சுதந்திர தின கொண்டாட்டம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட “ஹர் கர் திரங்கா” பிரச்சாரத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகிறது. ஒவ்வொரு இந்திய குடும்பமும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். பாஜக ஆளும் மாநிலங்களில் பல முதல்வர்களும் இந்த பிரச்சாரத்தை குறிக்கும் வகையில் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

Independence Day 2024 | சதந்திரதின செங்கோட்டை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
 

ஆகஸ்ட் 15ம் தேதி (நாளை) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் காலை 7:30 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து 11வது சுதந்திர தின உரையை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்வு தூர்தர்ஷன், பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) யூடியூப் சேனல் மற்றும் சமூக ஊடக தளங்களான X இல் @PIB_India மற்றும் PMO எக்ஸ் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்ப திட்டமிட்டுள்ளது. உங்கள் ஏசியாநெட் தமிழ் யூடியூப் சேனலிலுல் காணலாம்.

சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 இடங்கள் இவையே..!

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, நாட்டின் கடந்த கால சாதனைகள், எதிர்கால இலக்குகளை கோடிட்டுக் காட்டுவது மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பிரதமரின் உரையைத் தொடர்ந்து, இந்தியாவின் ராணுவ பலம், கலாச்சார செழுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் மாபெரும் அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!