இந்தியாவில் உள்ள டாப் 5 மிகப்பெரிய அணைகள் இவைதான்.. முழு பட்டியல் இங்கே!

First Published | Aug 11, 2024, 10:38 AM IST

இன்று உலகிலேயே அதிக அளவில் அணை கட்டும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் நவீன கட்டிடக்கலை மற்றும் மிகவும் பிரபலமான டாப் 5 அணைகள் என்னென்ன, அவற்றின் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.

5 Largest Dams in India

தெஹ்ரி அணை:

பாகீரதி நதி தெஹ்ரி அணை உத்தரகண்ட் மாநிலம் பாகீரதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தெஹ்ரி அணை இந்தியாவின் மிக உயரமான அணையாகவும், கிட்டத்தட்ட 261 மீட்டர் உயரம் கொண்ட உலகின் எட்டாவது உயரமான அணையாகவும் அறியப்படுகிறது.  இந்த அணை நீர் தேக்கம் பாசனம், நகராட்சி நீர் வழங்கல் மற்றும் 1,000 மெகாவாட் நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

Bhakra Nangal Dam

பக்ரா நங்கல் அணை:

சட்லஜ் நதி பக்ரா நங்கல் அணை என்பது சட்லெஜ் நதி ஹிமாச்சல பிரதேசத்தின் குறுக்கே கட்டப்பட்ட அணை ஆகும். பக்ரா நங்கல் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும், இதன் உயரம் 225 மீட்டர் மற்றும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய அணையாகும். "கோபிந்த் சாகர் ஏரி" என்று அழைக்கப்படும் அதன் நீர்த்தேக்கம் இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாகும்.

Tap to resize

Sardar Sarovar Dam

சர்தார் சரோவர் அணை:

நர்மதா நதி சர்தார் சரோவர் அணை, நர்மதா அணை என்றும் அழைக்கப்படுகிறது. இது குஜராத்தில் உள்ள புனித நதியான நர்மதையின் மீது 163 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளில் ஒன்று ஆகும். இது 200 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கிறது. இந்த அணை இந்தியாவின் 4 முக்கிய மாநிலங்களான குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

Hirakud Dam

ஹிராகுட் அணை:

ஒரிசா மாநிலத்தில் மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹிராகுட் அணை, கிட்டத்தட்ட 26 கிமீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான அணைகளில் ஒன்றாகும். இந்த ஹிராகுட் நீர்த்தேக்கம் ஏறக்குறைய 55 கிமீ நீளம் கொண்டது ஆகும். இது வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்திக்கான பல்நோக்கு திட்டமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Nagarjuna Sagar Dam

நாகார்ஜுனா சாகர் அணை:

கிருஷ்ணா நதி நாகார்ஜுனா சாகர் அணை தெலுங்கானாவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 124 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய அணையாக அறியப்படுகிறது. 26 வாயில்களுடன் 1.6 கிமீ நீளம் கொண்ட இந்த அணை, நமது நாட்டின் கட்டிடக்கலை முன்னேற்றத்தின் சான்றாகும். நாகார்ஜுனா சாகர் அணை 312 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கன அடி) நீர்த்தேக்கத் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துபாயில் இருந்து இந்தியாவிற்கு எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம்?

Latest Videos

click me!