கேரளாவுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது; பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

Published : Aug 10, 2024, 07:44 PM IST

கேரளா மாநிலத்தில் நேரில் ஆய்வு கொண்ட பிரதமர் மோடி மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என உறுதி அளித்தார்.

PREV
17
கேரளாவுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது; பிரதமர் மோடி நேரில் ஆறுதல்
ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த பிரதமர்

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

27
பாதிப்புகளை எடுத்துறைக்கும் அதிகாரிகள்

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பாதிக்கப்பட்ட மக்களையும், இடங்களையும் நேரில் பார்த்ததும் என் இதயம் கனத்துவிட்டது. மறுவாழ்வுக்கான பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. கேரளா மாநிலம் தனித்து விடப்படவில்லை. ஒட்டுமொத்த நாடும் கேரளா மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும்.

37
வயநாட்டில் பிரதமர் மோடி

மத்திய, மாநில அரசுகள் இணைந்து வயநாட்டை மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளும். மறுவாழ்வுக்கான பணிகளில் நிதி ஒருபோதும் தடையாக இருக்காது. மாநில அரசு சார்பில் முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

47
Narendra Modi in Wayanad

முன்னதாக வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளான சூரல்மாலா, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் பினராயி விஜயனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது.

57
Narendra Modi in Wayanad

இந்த ஆய்வைத் தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆவர்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

67
Narendra Modi in Wayanad

இதனைத் தொடர்ந்து காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து அவர்களையும் தோள்களில் தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்த கோரிக்கைகளை பிரதமர் மோடி பொறுமையுடன் கேட்டறிந்தார்.

77
Narendra Modi in Wayanad

இந்த ஆய்வின்போது மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories