அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! அலறிய படி உயிரிழந்த 17 பேர்!

Published : May 18, 2025, 12:09 PM IST

ஹைதராபாத்தில் உள்ள குல்சார் ஹவுஸ் அருகே மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

PREV
14

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரபலமான சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸ் அருகே இன்று அதிகாலை மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களில் பரவியதை அடுத்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

24

இந்த தீ விபத்து தொடர்பாக அப்பகுதியினர் உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 11 தீயணைப்பு வாகனங்கள் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

34

இந்த தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயங்கள் மற்றும் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் கட்டிடத்தில் சிக்கி உள்ள சிலரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

44

தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தீ விபத்தில் உயிரிாந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ஏற்பாடு செய்ய பிரதமருடன் பேசுவதாகக் கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories