மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும் 5 சலுகைகள்! இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

Published : May 17, 2025, 07:24 AM IST

இந்தியன் ரயில்வே மூத்த முடிமக்களுக்கு 5 சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அது என்ன? என்று இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

PREV
14
Indian Railways Gives 5 Benefits to Senior Citizens

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயிலில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 5 சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

24
Indian Railways

1. லோயர் பெர்த் வசதி

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சிரமம் ஏற்படாதவாறு லோயர் பெர்த் எனப்படும் கீழ் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த வசதி ரயில்களின் ஸ்லீப்பர், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் கிடைக்கிறது. ரயில் புறப்பட்ட பிறகும் கீழ் இருக்கைகள் காலியாக இருந்தால், அது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.

2. சக்கர நாற்காலி வசதி

ரயில் நிலையங்களில் இலவச சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. நடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். சக்கர நாற்காலிகளுடன், உதவிக்கு போர்ட்டர்களும் உள்ளனர்.

34
Indian Railways Facility

3. சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள்

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயணிகளுக்காக ரயில் நிலையங்களில் தனி டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது அவர்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தடுக்கிறது. இந்த வசதியின் மூலம் அவர்கள் விரைவாக டிக்கெட்டுகளைப் பெற முடிகிறது.

4. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள்

பெரிய ரயில் நிலையங்களில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (கோல்ஃப் வண்டிகள்) இலவசமாகக் கிடைக்கின்றன. ரயில் நிலைய பிளாட்பாரங்களில் இருந்து நுழைவு வாயிலுக்கு பேட்டரி கார்கள் மூலம் அழைத்து செல்லப்படுவதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகம் நடக்க வேண்டிய அவசியமில்லை.

44
Train Passengers

5. உள்ளூர் ரயில்களில் சிறப்பு இருக்கைகள்

மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களின் புறநகர் உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது பயணத்தின் போது அவர்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் வசதியான இருக்கையை வழங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories