புதிய QR குறியீடுடன் கூடிய PAN கார்டுகள் மின்னஞ்சல் வழியாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள PAN கார்டுகள் செல்லுபடியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.
புதிய PAN கார்டு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் பழைய PAN கார்டு மாற்றப்பட உள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு புதிய PAN கார்டுகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
210
புதிய PAN கார்டு விவரங்கள்
இந்த புதிய பான் கார்டை எவ்வாறு பெறுவது மற்றும் பழைய கார்டு முற்றிலும் செல்லாமல் போகுமா.? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் விவாதங்களாக நடைபெற்று வருகின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள பான் அட்டையில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு உள்ளது. இதனை தற்போது மேம்படுத்தி QR குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
310
QR குறியீடுடன் புதிய PAN கார்டு
QR குறியீடு கொண்ட புதிய பான் கார்டை எப்படிப் பெறுவது என்று பலருக்கும் கேள்விகள் உள்ளன. இந்த நிலையில் முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
410
பழைய PAN கார்டு செல்லுபடியாகும்
அந்த வகையில் பழைய கார்டு செல்லுபடியாகும் எனவும். அந்த கார்டு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் QR குறியீடு கொண்ட புதிய கார்டை மின்னஞ்சல் வழியாக இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
510
PAN கார்டு பெறுவது எப்படி?
அதே நேரத்தில் QR குறியீடு கொண்ட புதிய பான் கார்டை வீட்டிற்கு அட்டையாக பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
PAN கார்டைப் பெறுவது எப்படி? மின்னஞ்சல் வழியாக PAN கார்டைப் பெற, முதலில் இணையதளத்திற்குச் செல்லவும். உங்கள் PAN, ஆதார் மற்றும் பிறந்த தேதி விவரங்களை அந்த தளத்தில் வழங்க வேண்டும்
610
விவரங்களைச் சரிபார்த்தல்
தேவையான தகவல்களை வழங்கிய பிறகு, பொருந்தும் டிக் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் சமர்ப்பிக்க என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு புதிய வலைப்பக்கம் தோன்றும். வருமான வரித் துறையுடன் புதுப்பிக்கப்பட்ட தற்போதைய விவரங்களை பயனாளிகள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் OTP பெறுவதற்காக கிளிக் செய்ய வேண்டும்.
710
கட்டணம் செலுத்துதல்
இதனையடுத்து Physical முறையில் பான் அட்டையை பெற கட்டணத் தொகையைச் சரிபார்த்து, கட்டணத்தை உறுதிப்படுத்தும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும். கட்டணம் செலுத்தப்பட்டதும், தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும். கட்டணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதும், PAN பயனரின் மின்னஞ்சல் ஐடிக்கு PAN வழங்கப்படும்.
810
OTP சரிபார்ப்பு
OTP-ஐப் பயன்படுத்திச் சரிபார்க்கவும். OTP 10 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். இப்போது கட்டண முறையைத் தேர்வுசெய்யவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள டிக் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். கட்டணத் தொகையைச் சரிபார்த்து, கட்டணத்தை உறுதிப்படுத்தும் என்பதைக் கிளிக் செய்யவும்.
910
PAN வழங்கல்
கட்டணம் செலுத்தப்பட்டதும், தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும். கட்டணம் வெற்றிகரமாக இருந்தால், PAN பயனரின் மின்னஞ்சல் ஐடிக்கு PAN வழங்கப்படும்.
1010
உதவிக்குத் தொடர்பு கொள்ளவும்
பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் PAN வர சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். PAN வரவில்லை என்றால், கட்டணமில்லா எண்ணை அழைக்கவும்.