வீடு மாறிட்டீங்களா? ஆதார் கார்டு முகவரியை இலவசமாக மாற்றுவது எப்படி?

First Published | Dec 1, 2024, 10:35 AM IST

நீங்கள் சமீபத்தில் ஒரு புது வீட்டுக்கு மாறிட்டீங்களா? வீடு மாறியவுடன் வங்கிகள், ஈ-காம்ரஸ் தளங்கள் போன்ற பல தளங்களில் உங்கள் முகவரியைப் புதுப்பிப்பது அவசியம். குறிப்பாக உங்கள் ஆதாரில் முகவரியை புதுப்பிக்க மறக்காதீர்கள்.

Aadhaar Address Update

ஆதார் அட்டையில் உள்ள முகவரியை புதுப்பிப்பது, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேவைகளைத் தடையின்றி பெறுவதை உறுதிசெய்கிறது. அடையாளத் திருட்டு போன்ற தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் ஆதார் கார்டில் முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சமீபத்திய நிலவரப்படி அப்டேட் செய்துகொள்வது அவசியம்.

Aadhaar Address Update

தற்போது, ​​ஆதார் தகவல்களை இலவசமாகவே புதுப்பிக்க முடியும். ஆதார் ஆணையத்தின் (UIDAI) ஆன்லைன் போர்டல் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் கார்டு தகவல்களைப் புதுப்பிக்கலாம். ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆதார் ஆணையம் நீட்டித்துள்ளது.

Tap to resize

Aadhaar Address Update

ஆதார் இலவச அப்டேட் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 14, 2024 வரை உள்ளது. இந்தத் தேதிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்திக்கொள்ளலாம். முகவரி, மொபைல் எண் போன்ற எல்லா விவரங்களை இலவசமாக அப்டேட் செய்யலாம்.

Aadhaar Address Update

கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் அடையாளங்களில் மாற்றம் செய்ய அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சென்று கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Aadhaar Address Update

சமீபத்தில் நீங்கள் வீடு மாறியிருந்தால் உங்கள் ஆதாரில் புதிய முகவரியை அப்டேட் செய்ய ஆதார் ஆணையத்தின் இணையதளத்தை பயன்படுத்திகொள்ளுங்கள். myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்திற்குச் சென்று உங்கள் ஆதார் விவரங்களை பயன்படுத்தி உள்நுழையவும்.

Aadhaar Address Update

முகவரியை மாற்ற, JPEG, PNG அல்லது PDF வடிவத்தில் முகவரிச் சான்று (PoA) ஆவணத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவும். அப்லோட் செய்யும் ஃபைலின் அளவு 2 MB க்குள் இருக்க வேண்டும். ஆவணத்தைப் பதிவேற்றிய பிறகு, முகவரி மாற்றக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். உங்கள் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க, SRN எண் கிடைக்கும்.

Aadhaar Address Update

உங்கள் கோரிக்கையின்படி ஆதார் அட்டையில் முகவரி மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் SRN எண்ணை பயன்படுத்தி ஆதார் இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளவும். இந்த முறையில் ஆதார் அட்டையில் புதிய முகவரியை எந்தக் கட்டணமும் இல்லாமல் வீட்டில் இருந்தே மாற்றிவிடலாம். ஆனால், டிசம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு இந்த வசதியை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Latest Videos

click me!