ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால், காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்படும். இருப்பினும், முன்பதிவு சாளரத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டால், பயணிகள் அவற்றை மேனுவலாக ரத்து செய்ய வேண்டும்.
ரயில்வே விதிகளின்படி, பயணச்சீட்டுகளை ரத்து செய்யும்போது முன்பதிவுக் கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும். ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ஒரு பயணி உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், பயணிகள் நிலையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விதிகளின்படி, ரயில் புறப்படும் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டால், டிக்கெட் கட்டணத்தில் 25% பிடித்தம் செய்யப்படும். மேலும் ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 50% குறைக்கப்படும்.