கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் முகேஷ் அம்பானி இல்லை; ஆனா யாருன்னு பாருங்க!!

First Published | Dec 12, 2024, 3:05 PM IST

Top 10 Most Searched Persons in India in 2024 : கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்ற பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.…

Top 10 Most Searched Persons in India in 2024

Top 10 Most Searched Persons in India in 2024 : 2024 ஆம் ஆண்டு இன்னும் 19 நாட்களில் முடிந்து 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவங்கள், சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், அதிக வசூல் குவித்த படங்கள், கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் என்று பட்டியலை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

Radhika Merchant

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் கூகுள் வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் மகளான ராதிகா மெர்ச்சண்டுக்கும் கிட்டத்தட்ட ரூ.5000 கோடி மதிப்பில் திருமணம் நடைபெற்றது. இதில், ராதிகா மெர்ச்சண்ட் தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்தார்.

Tap to resize

Mukesh Ambani

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்கள் என்று பல துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூட கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Google’s Most Searched Person 2024

இந்த நிலையில் தான் 2024ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், முகேஷ் அம்பானியின் மருமகள் பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் அதிகமாக தேடப்பட்டவர்களின் டாப் 10 பட்டியலில் ராதிகா மெர்ச்சண்டும் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.

Top 10 Most Searched Persons in India in 2024

இவர் தவிர, பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓய்வு அறிவித்த வினேஷ் போகத் முழு நேர அரசியல்வாதியாக மாறினார். சமீபத்தில் நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

Vinesh Phogat

இந்த நிலையில் தான் வினேஷ் போகத் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் 2ஆவது இடத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இடம் பெற்றுள்ளார். 3ஆவது இடத்தில் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானும், 4ஆவது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், 5ஆவது இடத்தில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணும், 6ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வீரர் ஷஷாங்க் சிங்கும், 7ஆவது இடத்தில் இந்திய மாடல் நடிகை பூனம் பாண்டேவும் இடம் பெற்றுள்ளனர்.

Latest Videos

click me!