Holiday Tomorrow: முன்னாள் முதல்வர் மறைவு! நாளை பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!

Published : Dec 10, 2024, 05:47 PM IST

முன்னாள் கர்நாடகா முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடக அரசு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

PREV
15
Holiday Tomorrow: முன்னாள் முதல்வர் மறைவு! நாளை பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
SM Krishna

முதன் முதலில் கர்நாடகா அரசியலில் எஸ்.எம். கிருஷ்ணா சுயேட்சையாக களமிறங்கினார்.  பின்னர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய காங்கிரஸில் இணைந்தார். இதனையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா 1999 முதல் 2004 வரை கர்நாடகாவின் முதலமைச்சராக பணியாற்றினார். பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக மாற்றிய பெருமைக்குரியவர். 

25
Former Karnataka CM SM Krishna

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் 2009 முதல் அக்டோபர் 2012 வரை மத்திய வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார். மேலும் 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிராவின் ஆளுநராகவும் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டு வந்த எஸ்.எம். கிருஷ்ணா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி சென்றது மற்றும் காவிரி விவகாரத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை எஸ்.எம். கிருஷ்ணா நடத்தியுள்ளார். 

35
SM Krishna passed away

இந்நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல் குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

45
School College Holiday

இந்நிலையில் மூத்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கர்நாடக அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை டிசம்பர் 11ம் தேதி கர்நாடக மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பாடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

55
dk shivakumar

இதனிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.  எஸ்.எம். கிருஷ்ணாவின் உடல் நாளை காலை 8 மணி வரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்க வைக்கப்படும். பின்னர், அவரது சொந்த ஊரான மத்தூருக்கு எடுத்துச் செல்லப்படும், அங்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் 4 மணியளவில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றார். 

Read more Photos on
click me!

Recommended Stories