உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள் சவுரப் திரிபாதி- அனுஷ்கா திரிவேதி தம்பதி. இவர்கள் இருவரும் மருத்துவராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமில்லாமல் ராவத்பூரில் எம்பயர் என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் முடிமாற்று அறுவை சிகிச்சையால் தனது கணவர் வினித் தூபே உயிரிழந்ததாக ஜெயா திரிபாதி என்பவர் முதலமைச்சர் சேவை மையத்தில் ஆன்லைன் வழியாக மருத்துவமனைக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
24
தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்கள்
அதில் கடந்த மார்ச் 13ம் தேதி என் கணவர் அனுஷ்கா திவாரியின் மருத்துவமனையில் முடி மாற்று அறுவை செய்துகொண்டார். ஆனால், மறுநாளே முகம் வீங்கி, வலி ஏற்பட்டது. ஆனால், அடுத்த நாளே அவரது முகம் வீங்கி கடுமையான வலி ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாளே உயிரிழந்தார் என கூறினார். மேலும் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தொற்று மற்றும் அதற்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படாததே காரணம் என்று கூறியிருந்தார்.
34
காவல்துறையினர் வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே குஷாக்ரா கத்யார் என்பவர் அதே மருத்துவமனைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியன்று எம்பயர் மருத்துவமனையில் தனது சகோதரர் மாயங் கத்யார் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்களில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அடுத்த நாள் அவர் இறந்துவிட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த அனுஷ்கா திவாரி பல் மருத்துவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு ஆஜராக 6 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டும் ஆஜராகவில்லை. இதனையடுத்து அனுஷ்கா திரிவேதி தலைமறைவானார். மருத்துவரைக் கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி சரணடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.