பெங்களூரு விமான நிலையத்தில் Gen Z-ஐ கவரும் வகையில் 'Gate Z' என்ற புதிய ஹேங்கவுட் ஸ்பாட் திறக்கப்பட்டுள்ளது. இது வெறும் ஓய்விடம் மட்டுமல்லாமல், கஃபே-பார், ஆம்பிதியேட்டர், வேலை செய்வதற்கான வசதிகளுடன் உள்ளது.
விமான நிலையம் என்றால் “கேட் அருகே உட்கார்ந்து போன் ஸ்க்ரோல் பண்ணி நேரம் போகணும்” என்ற பழைய ஃபீல் தான் பலருக்கும் வரும். ஆனால் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2-க்கு சென்றால் அந்த எண்ணமே மாறும். குறிப்பாக Gen Z-ஐ மனதில் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய ஹேங்கவுட் ஸ்பாட் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு “Gate Z” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது வெறும் ஓய்வெடுக்கும் இடமல்ல, நண்பர்களுடன் பேசவும், ஒரு காப்பி குடித்தபடியே நேரம் கழிக்கவும் சரியான சமூக இடமாக உள்ளது. இந்த பெயரே தேசிய அளவிலான போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டதாம்.
24
விமான பயணிகளுக்கு முக்கிய அம்சங்கள்
இந்த “Gate Z” பகுதி, விமான நிலையத்தின் பிரபலமான ‘080 International Lounge’ அருகிலேயே அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கண்களை கவரும் லைட்டிங், வளைவான சீட்டுகள், மாடர்ன் லுக் என்று ஒரு சின்ன “சினிமா செட்” மாதிரி தெரியும். செல்ஃபி, ரீல்ஸ் எடுக்க விரும்புபவர்களுக்கு எங்கும் ஃபோட்டோ-ஃப்ரெண்ட்லி ஸ்பாட்ஸ் ரெடியாக இருக்கிறது. இங்குள்ள முக்கிய அம்சங்கள் பயணிகளுக்கு செம்ம சுவாரஸ்யம் தரும் வகையில் உள்ளன.
34
கெம்பேகவுடா விமான நிலையம் டெர்மினல் 2
பயணத்தின் நடுவே ரிலாக்ஸ் செய்ய ‘Bubble & Brew’ என்ற கஃபே-பார், நண்பர்களுடன் ஜாலியாக பேச ‘The Sipping Lounge’, ரெட்ரோ ஸ்டைல் உணவு அனுபவத்திற்கு ‘Subway Diner’ ஆகியவை முக்கிய ஹைலைட். அதோடு, விமான நிலையத்துக்குள்ளேயே திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க ஆம்பிதியேட்டர் போல ஒரு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே இடைக்கிடை “பாப்-அப்” நிகழ்ச்சிகளும் நடக்கும்.
வேலை செய்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஹைஸ்பீட் வைஃபை, நிறைய சார்ஜிங் பாயிண்ட்ஸ், பயணிகளுக்கு வழிகாட்டும் AI நெவிகேஷன் சிஸ்டம் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது எந்த “எக்ஸ்க்ளூசிவ் கிளப்” மாதிரியும் இல்லை. வேலை பார்ப்பவர்கள், ஃப்ரீலான்சர்கள், குடும்ப பயணிகள் என எல்லாரும் சுலபமாக வந்து அமர்ந்து நேரம் கழிக்கலாம். வசதி, கலாச்சாரம், அனுபவம் எல்லாம் சேர்ந்த ஒரு புதிய மைல்கல் இது என்பதில் சந்தேகம் இல்லை.