மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம், ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
சமையல் எரிவாயு சிலிண்டர் வந்த பிறகு கிராமப்புற வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மரத்தை வெட்டி, நெருப்பு மூட்டி புகை நிரம்பிய சமையலறை என இவை பல குடும்பங்களின் அன்றாட சிரமமாக இருந்தன. இந்த நிலையை மாற்றுவதற்காக மத்திய அரசு 2016ஆம் ஆண்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
27
இலவச கேஸ் இணைப்பு திட்டம்
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஏழை மற்றும் கிராமப்புற பெண்களுக்கு சுத்தமான எரிசக்தி வழங்குவது ஆகும். தகுதி பெற்ற குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது. மேலும், ஒரு சிலிண்டர் ரூ.550க்கு கிடைக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை இந்த சலுகை பொருந்தும்.
37
உஜ்வாலா 2.0
2016 மே 1ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பாலியா நகரில் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கினார். முதல் கட்டத்தில் 10 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் உஜ்வாலா 2.0 மூலம் கூடுதலாக கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்தன. தற்போது நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றன.
இந்த திட்டத்தில் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.2200 மற்றும் 5 கிலோ சிலிண்டருக்கு ரூ.1300 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. பாதுகாப்பு டெபாசிட், ரெகுலேட்டர், ஹோஸ், கஸ்டமர் கார்டு உள்ளிட்ட செலவுகள் இதில் அடங்கும். முதல் ரீஃபில் இலவசமாக வழங்கப்படும்.
57
விண்ணப்பதாரர் தகுதிகள்
தகுதி பெற, விண்ணப்பதாரர் இந்தியப் பெண் குடிமக்களாக இருக்க வேண்டும். வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். BPL குடும்பம், SC/ST, அத்தியோதய அண்ணா யோஜனா அல்லது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா பயனாளி போன்ற பிரிவுகளில் ஒருவர் இருக்க வேண்டும். ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் அவசியம்.
67
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் முறையில் pmuy.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம். Indane, Bharat Gas, HP Gas போன்ற ஏஜென்சிகளை தேர்வு செய்து e-KYC முடிக்க வேண்டும். ஆஃப்லைன் முறையிலும் அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடம் படிவம் சமர்ப்பிக்கலாம்.
77
வங்கி கணக்கில் மானியத் தொகை
மானியம் தொகை நேரடியாக வங்கி கணக்கில் DBT முறையில் செலுத்தப்படும். ரூ.900க்கு சிலிண்டர் வாங்கினால், ரூ.550க்கு மேல் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும். சமையலறையில் புகையில்லா சூழலை உருவாக்கிய இந்த திட்டம் ஆனது ஏழை பெண்களின் உடல்நலத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளது.