சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்: இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

First Published | Sep 18, 2024, 9:44 AM IST

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று நடக்கிறது.

Jammu Kashmir Elections 2024 after Abrogation of Article 370

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மேலும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. அதற்குப் பிறகு முதல் முறையாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று நடக்கிறது.

Jammu Kashmir Elections 2024 First Phase

ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றிற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருக்கும் 24 தொகுதிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

Tap to resize

Jammu Kashmir Elections after 10 years

முதல் கட்ட வாக்குப்பதிவில் 219 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உள்பட சுமார் 23.27 லட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

Jammu Kashmir Assembly Elections 2024

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். ஒன்றுபட்ட மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு  ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Jammu Kashmir Elections 2024

முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் சுமார் 35,500 பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். வாக்குப்பதிவு நடக்கும் 24 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்காக பிரத்யேகமான 24 சிறப்பு வாக்குச்சாவடிகளையும் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

Latest Videos

click me!