மோடி பிறந்தநாள்! போட்டிபோட்டு வாழ்த்திய தமிழ்நாட்டின் தளபதிகள் ஸ்டாலின், விஜய்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

First Published | Sep 17, 2024, 11:00 AM IST

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மோடியின் தலைமையில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாகவும், தமிழ் மொழி மீது அவருக்கு அளப்பரிய அன்பு இருப்பதாகவும் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

Modi

மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை 3வது முறையாக கைப்பற்றி அசத்தியவர் மோடி, இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்தபாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. 
 

ஆளுநர் ரவி வாழ்த்து

சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனை செயவதாக கூறியுள்ளார். 


ஸ்டாலின், ராமதாஸ், விஜய் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  தாங்கள் நீண்ட காலம் நிலைத்த உடல்நலத்தோடு திகழ்ந்திட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; இந்தியத்  திருநாட்டை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 'பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளோடு இருக்க பிரார்த்திக்கிறேன் என விஜய் தெரிவித்து்ள்ளார்.

Latest Videos

click me!