ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.! இனி ரிசர்வேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை- தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

First Published | Sep 17, 2024, 8:22 AM IST

தமிழகத்தில் வேலை தேடி வரும் வெளிமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்த பயணிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வாக கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

பிழைப்பை தேடி வெளியூர் செல்லும் இளைஞர்கள்

சொந்த ஊரில் வேலை இல்லாத காரணத்தால் பிழைப்பு தேடி லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்கின்றனர். இதனால் நாள் தோறும் ரயில்களில் எப்போதும் இல்லாத வகையில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. முக்கிய விஷேச நாட்களில் சொல்ல வேண்டிய தேவையில்லை. முன்பதிவு செய்த ரயில் பெட்டி மட்டுமல்ல கழிவறையில் கூட முடங்கிக்கொண்டு பயணிக்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் பீகார், ஒடிசா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

ரயில்களில் கூட்ட நெரிசல்

கட்டிடம் கட்டும் பணியில் தொடங்கி, முடி வெட்டுவது, கறி வெட்டுவது என எந்த பணியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் நாள்தோறும் சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். ரயில்களில் வட மாநில இளைஞர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் நிலையோ பரிதாபமாக உள்ளது.

தாங்கள் ரிசர்வேஷன் செய்த இடத்தில் கூட உட்கார முடியாத நிலையானது நீடித்து வருகிறது. ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கும் முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கும் இடையே நாள்தோறும் மோதல் ஏற்படுகிறது. இதனை ரயில்வே போலீசார் கட்டுப்படுத்தினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானது மிகவும் குறைவாக இருப்பதால் வேறு வழியின்றி போலீசாரும் டிக்கெட் பரிசோதகரும் திணறி வருகின்றனர்.

Tap to resize

train ticket

புதிய பெட்டி உற்பத்தி

இந்த நிலையில் தான் நாடு முழுவதும் எதிரொலித்துள்ள இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ரயில்வே துறை முக்கிய ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து அனைத்து ரயில்களிலும் கூடுதலாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் 2 அல்லது 3 மட்டுமே இருக்கிறது.  இச்சூழலை தவிர்க்க நடப்பு நிதியாண்டில் புதிதாக 10,000 முன்பதிவில்லா பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன் படி, புதிய முன்பதிவில்லா பெட்டிகள் தயாரிக்கும் பணியை  சென்னை ஐசிஎப் உள்ளிட்ட ரயில் பெட்டி தயாரிக்கும்  ஆலைகள் மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் ரயில்களில் அதிகமாக கூட்டம் நிரம்பி வழியும் ரயில்களில் கூடுதல் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்யப்படாத பெட்டி அதிகரிப்பு

அதன் படி தெற்கு ரயில்வேயில் இயங்கும் 15 ரயில்களில் வரும் ஜனவரி மாதம் முதல் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், சேலம் வழியே இயங்கும் 5 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்படுகிறது. 

இதில் அதிகமான கூட்டம் செல்லும் சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரசில் (ரயில் எண் 22649 -22650) இருமார்க்கத்திலும் வருகிற ஜனவரி 20, 23ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 3ல் இருந்து 4 ஆக அதிகரிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா.! சிறப்பு ரயில், பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.? 

கூட்ட நெரிசல் குறையுமா.?

சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் வாராந்திர ரயில், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்,  சென்னை சென்ட்ரல்-ஆலப்புலா எக்ஸ்பிரஸ்,  சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி எண்ணிக்கையில் ஒன்றை குறைத்து, முன்பதிவில்லா பெட்டியை அதிகரிக்கப்படவுள்ளது.  

தற்போது மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. வரும் நாட்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை அனைத்து ரயில்களிலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயல்வே துறையின் இந்த முடிவால் கூட்ட நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் அதிகரிப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்யலாமல் சாதாரண பெட்டிகளில் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது. 

Latest Videos

click me!