கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்டிற்கும் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபல நடிகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கிட்டதட்ட 1 வாரத்திற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் அம்பானி வீட்டு திருமணத்தை பற்றியே செய்தி வெளியிடும் அளவிற்கு திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனிடையே ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி விழாவின் போதும் முகேஷ் அம்பானி கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்வது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளாக அவர் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளார்.