Fact Check: வீட்டுக்கு வீடு இலவச வாஷிங் மெஷின் வழங்கும் மோடி அரசின் திட்டம்; உண்மை என்ன?

First Published Oct 10, 2024, 9:53 AM IST

மத்திய அரசு பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வீடுக்கு வீடு வாஷிங் மிஷின் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகத் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.

Washing machine

மத்திய அரசு பெண்களுக்காக புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் திட்டம் பற்றிய தகவல்கள் உண்மையா என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

Washing machine scheme

அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்கள் பல செயல்பாட்டில் உள்ளன. பிரதமர் கிசான் யோஜனா, முத்ரா யோஜனா போன்ற திட்டங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

Latest Videos


Washing machine for women

ஆனால், சிலர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் போலித் தகவல்களை பரப்புகின்றனர். அந்த வகையில் மத்திய அரசு பெண்களுக்காக புதிய திட்டத்தைக் கொண்டுவர இருப்பதாகவும் பொய்யான தகவல் பரவி வருகிறது.

Modi Washing machine

வீடுதோறும் இலவச வாஷிங் மெஷின் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ வைரலாகப் பரவியதை அடுத்து, பலரும் இந்தத் திட்டம் குறித்து விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

Washing machine scheme fact check

இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதைப்பற்றி விளக்கம் அளித்துள்ளது. இலவச வாஷிங் மெஷின் திட்டம் பற்றி பரவிவரும் செய்தி உண்மையானது அல்ல. அப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்யவில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறது.

Washing machine

சமூக ஊடங்களில் அரசின் நலத்திட்டங்கள் பற்றி பலவிதமாக பொய் பிரச்சாரங்கள் நடக்கின்றன. பொதுமக்கள் இந்த வதந்திகளை நம்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். வதந்தியை நம்பி ஏமாறாமல் இருக்க எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து அறிந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.

click me!