தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் கலங்கிப் போன பிரஜ்வல் ரேவண்ணா, கண்ணீர் விட்டபடி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
குற்றப் புலனாய்வுத் துறை இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்தது. அதில், பிரஜ்வல் ரேவண்ணா அந்தப் பெண்ணை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவில் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணை மற்றும் வழக்கு நடைபெறும் காலத்தில், பாதிக்கப்பட்ட பெண் தான் பாதுகாத்து வைத்திருந்த ஒரு புடவையை ஆதாரமாகச் சமர்ப்பித்தார். தடயவியல் பரிசோதனையில், அந்தப் புடவையில் விந்து அணுக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்தை நிரூபிப்பதற்கான முக்கிய சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.