மேலும், அந்தமான் நிகோபர் தீவிலும் இன்று அதிகால் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் பிளேர் நகரிலிருந்து 233 கி.மீ. தென்கிழக்கே அதிகாலை 2.35 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.