ரூ.423 கோடியில் மிதக்கும் சூரியஒளி மின் நிலையம்! - மின்னுற்பத்தி பணிகள் தீவிரம்!!

Published : Jul 03, 2022, 10:36 AM IST

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியஒளி மின்னுற்பத்தி திட்டமாக கருதப்படும் மிதக்கும் சூரியஒளி மின் நிலையம் தெலங்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 மெகாவாட் பிரிவு வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கிவிட்டதாக தேசிய அனல்மின் கழகம் தெரிவித்துள்ளது.  

PREV
12
ரூ.423 கோடியில் மிதக்கும் சூரியஒளி மின் நிலையம்! - மின்னுற்பத்தி பணிகள் தீவிரம்!!
Solar power station

தெலங்கானா மாநிலம் ராம குண்டத்தில் 100 மெகாவாட் மிதக்கும் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கடைசி பகுதியான 20 மெகாவாட் பிரிவு வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கியுள்ளது.

இதன்மூலம் தென்னிந்தியாவின் மிதக்கும் சூரிய சக்தியின் மொத்த வணிக செயல்பாடு 217 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது தவிர கேரள மாநிலத்தில் 92 மெகாவாட் மிதக்கும் சூரியஒளி மின்னுற்பத்தி நிலையமும், ஆந்திராவில் 25 மெகாவாட் மிதக்கும் சூரியஒளி மின் உற்பத்தி நிலையமும் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 13,834.54 கோடி கடன் உதவி; தமிழ்நாட்டுக்கும் பங்கு
 

22
Solar power station

தற்போது ரூ.423 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இத்திட்டத்தில் நீர்த்தேக்கத்தின் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் 2.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11,200 சூரிய ஒளி (சோலார்) தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இதை 33 கிலோ வோல்ட் நிலத்தடி கேபிள்கள் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.மிதக்கும் சோலார் பேனல்கள் இருப்பதால், நீர்நிலைகளில் இருந்து ஆவியாதல் விகிதம் குறைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

5000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீர் புகை... மூச்சு முட்டியதால் அலறிய பயணிகள்..!

இதனால் ஆண்டுக்கு சுமார் 32.5 லட்சம் கன மீட்டர் நீர் ஆவியாவதை தடுக்க முடியும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சோலார் மாட்யூல்களுக்கு அடியில் உள்ள நீர்நிலைகள் அவற்றின் சுற்றுப்புற வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. அதன் மூலம் சோலார் பேனல்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தி மேம்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

click me!

Recommended Stories