Alluri Sitarama Raju: பிரதமர் மோடி திறந்து வைத்த அல்லூரி சீதாராம ராஜு சிலை..யார் இவர்..? ஓர் சிறப்பு பார்வை...

First Published Jul 4, 2022, 2:10 PM IST

Alluri Sitarama Raju: பிரதமர் நரேந்திர மோடி விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை இன்று திறந்து வைக்கிறார்.  இவரின் கதாபத்திரத்தை ராஜமௌலியின் இயக்கத்தில் சமீபத்தில், வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் ஏற்று நடித்தது குறிப்பிடக்கத்தக்கது. 

Alluri Sitarama Raju:

ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்திற்கும் குஜராத்தின் காந்திநகருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜூலை 4) அதாவது இன்று திறந்து வைக்கிறார். சுதந்திர போராட்ட தியாகி அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாள் விழாவை ஒட்டி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Alluri Sitarama Raju:

யார் இந்த அல்லூரி சீதாராம ராஜூ..?

1897ம் ஆண்டு ஜூலை 4 அன்று பிறந்த அல்லூரி சீதாராம ராஜூ, கிழக்குத் தொடர்ச்சி மலை பிராந்தியத்தின் பழங்குடி சமூகத்தினரின் நலன்களை பாதுகாக்க பிரிட்டிஷாருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். 

மேலும் படிக்க....விரைவில் தமிழகம், தெலங்கானாவில் பாஜக ஆட்சி.. அடுத்த டார்கெட் தென்னிந்தியாதான்.. கர்ஜனை செய்த அமித் ஷா.!

Alluri Sitarama Raju:

19ம் நூற்றாண்டில் ஆந்திரா பகுதியில் பழங்குடியினருக்கு எதிராக ஆங்கிலேயே அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக 1882ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மெட்ராஸ் வனத்துறை சட்டம் பழங்குடியினரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து,  1922ஆம் ஆண்டு அல்லூரி சீதா ராமராஜூ  தலைமையில் ஆயுதம் ஏந்தி பலரும் போராட்டம் செய்தனர்.


மேலும் படிக்க....விரைவில் தமிழகம், தெலங்கானாவில் பாஜக ஆட்சி.. அடுத்த டார்கெட் தென்னிந்தியாதான்.. கர்ஜனை செய்த அமித் ஷா.!

Alluri Sitarama Raju:

இந்த போராட்டம் ஆங்கிலேயே அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது. இதையடுத்து, 1924ஆம் ஆண்டு அல்லூரி சீதாராம ராஜூவை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. இதையடுத்து, அவர் காவலர்களால்  சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவருடைய தியாகத்தை பாராட்டி இந்திய அரசாங்கம் சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமான ஒருவர் என்ற அந்தஸ்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Alluri Sitarama Raju:

ஆர்.ஆர்.ஆர் படத்தில் காட்டப்பட்ட அல்லூரி சீதாராம ராஜூ கதாபத்திரம்:

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வசூலில் 1000 கோடியை கடந்து சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைத்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதா ராமராஜூ  கதாபாத்திரத்தில் ராம் சரண் மற்றும் கொமரம் பீம் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 

மேலும் படிக்க....விரைவில் தமிழகம், தெலங்கானாவில் பாஜக ஆட்சி.. அடுத்த டார்கெட் தென்னிந்தியாதான்.. கர்ஜனை செய்த அமித் ஷா.!

click me!