350 கிலோ RDX, 2 AK-47 ரக துப்பாக்கிகள், குவியலாய் வெடிமருந்துகள்..! மருத்துவர்கள் வீடுகளில் பயங்கரவாத பொருட்கள் பதுக்கல்..! காவல்துறை அதிர்ச்சி..!

Published : Nov 10, 2025, 10:29 AM IST

பயங்கரவாதிகளுடன் இந்த மருத்துவர்களின் பங்கு என்ன என்பதை போலீசார் தற்போது கண்டறிய முயற்சித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பல மாநிலங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

PREV
13

ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து சுமார் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ், இரண்டு ஏ.கே.-47 துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள் மற்றும் ரசாயன பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புக் குழு, உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து மருத்டுவர் வீட்டை சோதந்னை செய்தனர்.

பயங்கரவாத அமைப்பான அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் மீதான விசாரணையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் மூன்று மருத்துவர்கள் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவர்களில் இருவரான அனந்த்நாக்கில் வசிக்கும் அடில் அகமது ராதர் புல்வாமில் வசிக்கும் முசம்மில் ஷகீல் ஆகியோர் சஹாரன்பூர், ஃபரிதாபாத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர். மூன்றாவது மருத்துவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

23

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் ஆதில் ராதரின் தனிப்பட்ட லாக்கரில் இருந்து ஏகே-47 துப்பாக்கி மீட்கப்பட்டது. அனந்த்நாக் கூட்டு விசாரணை மையத்தின் உதவியுடன் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்த நேரத்தில், ஆதில் ராதர் கல்லூரியில் மூத்த மருத்துவராகப் பணிபுரிந்தார். ஆனால் அவர் அக்டோபர் 24, 2024 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதீலும் அவரது சக மருத்துவர்களும் பயங்கரவாத அமைப்பான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்தின் வலையமைப்பை மீண்டும் செயல்படுத்த முயற்சிப்பதாக விசாரணை நிறுவனங்கள் நம்புகின்றன. இந்த அமைப்பு 2017 ஆம் ஆண்டு முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி ஜாகிர் மூசாவால் உருவாக்கப்பட்டது. மேலும் காஷ்மீரில் ஷரியா சட்டத்தின் கீழ் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவி இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

33

இவ்வளவு பெரிய அளவிலான ஆர்.டி.எக்ஸ் மற்றும் ஆயுதங்கள் ஃபரிதாபாத்துக்கு எப்படி கொண்டுவரப்பட்டன. பயங்கரவாதிகளுடன் இந்த மருத்துவர்களின்  பங்கு என்ன என்பதை போலீசார் தற்போது கண்டறிய முயற்சித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பல மாநிலங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவுடனான அந்த அமைப்பின் தொடர்புகளை ஏஜென்சிகள் கண்டுபிடித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories