உத்தரபிரதேசத்தில் இருந்து புதுதில்லியை இணைக்கும் புதிய அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. இது ஆக்ரா மற்றும் டெல்லி இடையேயான தூரத்தை வெறும் 1 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து, இந்தியாவின் அதிவேக ரயில் சேவைகளில் ஒன்றாக இது இருக்கிறது.
25
Train
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா மற்றும் புது தில்லி இடையே 160 கிமீ வேகத்தில் இயக்கப்படும். 200 கிமீ பயணத்தை முடிக்க 2 முதல் 4 மணி நேரம் வரை எடுக்கும் அதே பாதையில் உள்ள மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது இது கணிசமான முன்னேற்றம் ஆகும்.
35
Vande Bharat Express
16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஆக்ரா மற்றும் லக்னோ நிலையங்கள் வழியாக புது தில்லியை அடையும். 150 முதல் 200 கிமீ தொலைவில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது வந்தே பாரத். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.
45
Vande Bharath
இது ரயில் 18 என்றும் அழைக்கப்படுகிறது, இது மணிக்கு 180 கிலோமீட்டர் (மணிக்கு 112 மைல்) வேகத்தில் செல்லும். இருப்பினும், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுக் காரணங்களுக்காக, இது பொதுவாக மணிக்கு 160 கிலோமீட்டர் (மணிக்கு 99 மைல்) வேகத்தில் இயங்கும்.
55
Indian Railways
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (EMU) ஆகும். இது மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கவாச் தொழில்நுட்பம், 360 டிகிரி சுழலும் நாற்காலிகள், திவ்யாங்ஜனுக்கு ஏற்ற கழிப்பறைகள் மற்றும் ஒருங்கிணைந்த பிரெய்லி சிக்னேஜ்கள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.