Three Language Policy : இனி 3 மொழி படிக்கணுமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி கருத்து!

Published : Aug 21, 2026, 03:50 PM IST

Three Language Policy : 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை திடீரென அமல்படுத்துவது மாணவர்களுக்கு சுமையாகக் கூடாது எனவும், ஆசிரியர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உரிய முறையில் திட்டமிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

PREV
15
மும்மொழிக் கொள்கை விவகாரம்: உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் புதிய நடைமுறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், மாணவர்களுக்கு கூடுதல் கல்விச்சுமை ஏற்படாத வகையில் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மும்மொழி கற்பிப்பதில் அடிப்படையில் தவறு இல்லை என்றாலும், அதை எப்போது, எப்படி அறிமுகப்படுத்துவது, அதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்பதுதான் முக்கியம் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Plastic Business : பிளாஸ்டிக் வேஸ்ட் வச்சு மாதம் ₹40 லட்சம் சம்பாதிப்பது எப்படி? அல்டிமேட் பிசினஸ் ஐடியா!

25
சிபிஎஸ்இயின் புதிய மும்மொழிக் கொள்கை என்ன?

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய திட்டத்தின்படி, 2026 ஜூலை 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிப்பது கட்டாயம். அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். மூன்றாவது மொழியாக மாணவர்கள் வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.

இந்த மாற்றம் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் சிபிஎஸ்இயின் பாடத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், மூன்றாவது மொழிக்கு 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு இருக்காது என்றும், அதன் மதிப்பீடு பள்ளி அளவில் உள்மதிப்பீடாக நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Instant Tea : பால் வேண்டாம், கேஸ் வேண்டாம்.. 1 நிமிஷத்துல ஸ்ட்ராங் டீ ரெடி!

35
மாணவர்களுக்கு ஏன் அழுத்தம் ஏற்படலாம்?

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், போதுமான ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு இல்லாமல் புதிய மொழியை திடீரென அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு சுமையாகலாம் என்ற கவலை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஏற்கெனவே 9-ஆம் வகுப்பில் படித்து, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு புதிய மொழியை சேர்ப்பது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என வாதிடப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், புதிய மொழியைக் கற்றுக்கொள்வது ஒரு நல்ல திறன் என்றாலும், அதை அறிமுகப்படுத்தும் முறை மாணவர்களுக்கு சுமையாக மாறக்கூடாது என்று கூறியுள்ளது. போதுமான தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Revati Pokkisham Yoga : பொக்கிஷங்களை அள்ளப் போகும் 4 ராசிகள்! ரேவதி பொக்கிஷ யோகத்தால் இனி தொட்டதெல்லாம் ஹிட்டு!

45
6-ஆம் வகுப்பிலேயே தொடங்கலாமா? நீதிமன்றம் கூறியது என்ன?

மும்மொழிக் கொள்கையை 9-ஆம் வகுப்பில் திடீரென அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, முன்னதாகவே ஒரு வகுப்பில் இருந்து தொடங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக, 6-ஆம் வகுப்பை தொடக்கப் புள்ளியாகக் கொண்டால், இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளித்து, அடுத்த கல்வியாண்டில் இருந்து தொடங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 6, 4 அல்லது 3-ஆம் வகுப்பு என எந்த நிலையில் மொழிக் கற்றலை தொடங்குவது என்பது பாடத்திட்டத்தைப் பொறுத்து கவனமாக முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினர்.

மேலும், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கருதுவதா அல்லது வெளிநாட்டு மொழியாகக் கருதுவதா என்பதும் கொள்கையில் தெளிவுபடுத்த வேண்டிய விஷயமாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சிபிஎஸ்இ மட்டுமின்றி நாட்டில் உள்ள பிற கல்வி வாரியங்களின் நிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதையும் படிங்க :Necklace Designs : ரூ.300-க்குள் இவ்ளோ அசத்தலான நெக்லஸ்களா? செம்ம டிசைன்ஸ்!

55
“எந்த மொழியாக இருந்தாலும் மரியாதை வேண்டும்” – உச்சநீதிமன்றம்

மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில், பிராந்திய மொழிகள் மீது தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டீ, இந்தக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஆயிரக்கணக்கான நிபுணர்களிடம் கருத்துகள் பெறப்பட்டதாகத் தெரிவித்தார். நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் 4.45% மட்டுமே என்றும், 99.19% பள்ளிகளில் ஏற்கெனவே இரண்டு இந்திய/உள்ளூர் மொழிகளை கற்பிக்கும் நடைமுறை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, “மொழி கற்றலில் தவறில்லை; ஆனால் மாணவர்களுக்கு அழுத்தம் வரக்கூடாது” என்பதே இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய முக்கிய அம்சமாக உள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 10 நாட்களுக்குப் பிறகு நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : White Clothes : வெள்ளைத் துணிகளை எப்பயும் பளிச்சுன்னு வச்சுக்க 6 சூப்பர் டிப்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories