Tirumala: திருப்பதி திருமலைக்கு போறீங்களா? இந்த மோசடி கும்பலிடம் சிக்காதீங்க.. பணத்தை இழக்க நேரிடும்!

Published : Aug 19, 2026, 07:48 PM IST

Tirumala Devotees Alert: திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க திட்டமிடுகிறீர்களா? பக்தர்களுக்கான அறைகளைப் பெற்று, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி முயற்சிகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

PREV
15
திருமலை திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருமலைக்கு வரும் பக்தர்களை குறிவைத்து தங்குமிடங்களை முறைகேடாகப் பெறும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை எச்சரித்துள்ளது. போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி பக்தர்களுக்காக ஒதுக்கப்படும் அறைகளை பெற்றுக்கொண்டு, பின்னர் அவற்றை அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களை கண்காணித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், போலி அடையாள ஆவணத்தை பயன்படுத்தி மீண்டும் தங்குமிட அறை பெற முயன்றதாக கூறப்படும் நபர் ஒருவர் அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட சம்பவம் திருமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
போலியான ஆவணங்கள்

கிடைத்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 16ஆம் தேதி ஏற்கனவே போலி அடையாள ஆவணத்தை பயன்படுத்தி அறை பெற்றதாக கூறப்படும் ஒருவர், மற்றொரு போலி அடையாள அட்டையுடன் மீண்டும் அறை பெற வரிசையில் நின்றுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மத்திய வரவேற்பு அலுவலக ஊழியர்கள் அவரை தடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 32 வயதான ஆஷிக் அலி பி.எம். என தெரியவந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து இரண்டு போலி ஆதார் அட்டைகள், அறை பதிவு சீட்டு, ரூ.800 ரொக்கம் மற்றும் கைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sun Mercury Ketu Conjunction: சூரியன், புதன், கேது சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணமழை... உங்க ராசி இருக்கா?

35
காவல்துறை விசாரணை

விசாரணையின்போது, ஒரு அறைக்கு ரூ.1,000 வழங்குவதாக கூறி ரஞ்சித் என்ற இடைத்தரகர் தன்னை இந்தப் பணியில் ஈடுபடுத்தியதாக அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி திருமலையில் தங்குமிட அறைகளை பெறுவதும், பின்னர் அவற்றை இடைத்தரகரிடம் ஒப்படைப்பதும் தனது பணியாக இருந்ததாக அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அறைகள் பின்னர் பக்தர்களுக்கு அதிக விலைக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்புப் பிரிவு திருமலை 2 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

45
திருமலைக்கு வரும் பக்தர்கள்

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திருமலைக்கு வரும் பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. தங்குமிடம் அல்லது தரிசன ஏற்பாடு செய்து தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் விவரங்கள், புகைப்படம், கைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் வழங்குவதையும் தவிர்க்க வேண்டும். தரிசனம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட தேவஸ்தான சேவைகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ கைபேசி செயலியை மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.

55
அதிகாரப்பூர்வ வழிகளை பின்பற்றவும்

தங்குமிடம் அல்லது தரிசனத்தை ஏற்பாடு செய்து தருவதாக கூறி யாராவது பணம் கேட்டால், பக்தர்கள் உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது இடைத்தரகர்கள் குறித்து தேவஸ்தானத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் உதவிக்காக 155257 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம். மேலும், இடைத்தரகர்கள் தொடர்பான புகார்களுக்கு 9866898630 என்ற தேவஸ்தான கண்காணிப்பு எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். திருமலை பயணத்தை திட்டமிடுபவர்கள் குறைந்த விலையில் அறை கிடைக்கும் என்ற ஆசையில் அறிமுகமில்லாதவர்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ வழிகளில் மட்டுமே முன்பதிவு செய்வது மோசடியில் சிக்காமல் இருக்க உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories