கிங்பிஷர் காலண்டர்: மாடல்கள் தேர்வு ரகசியம் உடைத்த மல்லையா!

Published : Jun 06, 2025, 11:36 AM IST

கிங்பிஷர் காலெண்டரில் இடம்பெற்ற மாடல்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறித்து விஜய் மல்லையா மனம் திறந்துள்ளார். கத்ரீனா கைஃப், தீபிகா படுகோனே போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த காலெண்டரில் இடம்பெற்றதன் மூலம் புகழ்பெற்றனர்.

PREV
18
கலெண்டரை பார்த்து மயங்கிய இளைஞர்கள்

2003 ஆம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா வெளியீட்ட காலண்டர், அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் எப்போது பிறக்கும் என்று நினைக்க தோன்றியது இளைஞர்களை. கிங்பிஷர் சுவிம்சூட் காலெண்டரிட் இடம் பிடித்த மாடல்கள் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்து இளைஞர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தனர்.

28
இளைஞர்களை காக்க வைத்த காலெண்டர்கள்

2003ஆம் ஆண்டில் யூனைடட் ப்ரூவரிஸ் குழுமம் வெளியிட்ட இந்த காலெண்டர், ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் அத்துல் காஸ்பேகர் மூலம் படம்பிடிக்கப்பட்டது. இது இந்திய மாடல்களுக்கு முக்கியமான ஒரு தளமாக இருந்தது. கத்ரீனா கைஃப் 2003ஆம் ஆண்டில் முதல் பதிப்பில், தீபிகா படுகோனே 2006ஆம் ஆண்டு பதிப்பில் தோன்றினர். இருவரும் பின்னர் பாலிவுட் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்தனர்.இந்த காலெண்டர் பல பெண்களுக்கு சினிமா வாய்ப்புகளைத் தந்தது. மதுர் பண்டார்கரின் 2015 ஆம் ஆண்டு திரைப்படமான Calendar Girls கூட இந்த காலெண்டரால் தூண்டுபட்டதாகக் கூறப்படுகிறது. அது இந்த மாடல்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.

38
கிங்பிஷர் காலெண்டர் மூலம் பிரபலமானவர்கள்

கத்ரீனா கைஃப் (2003)

யானா குப்தா (2003)

தீபிகா படுகோனே (2006)

நர்கிஸ் ஃபக்ரி (2009)

ஏஷா குப்தா (2010)

சோனாலி ராவுத் (2010)

லிசா ஹெய்டன் (2011)

ஆஞ்சலா ஜான்சன் (2011)

சாயாமி கேரா (2012)

ஐஸ்வர்யா சுஷ்மிதா (2016)

48
உச்சம் தொட்ட மாடல்கள்

கிங்பிஷர் காலெண்டரில் 2003 ஆம் ஆண்டு இடம் பெற்ற கத்ரீனா கைஃப்- ஐ பாலிவுட் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அதேபோல்தீபிகா படுகோனே சினிமா அறிமுகத்திற்கு முன்பே கிங்பிஷர் காலெண்டரில் இடபிடித்து புகழ்பெற்றார். நர்கிஸ் ஃபக்ரி, ஏஷா குப்தா ஆகியோர் திரைப்படத்துறையில் எளிதாக நுழைந்து ஹிந்தி பட உலகில் பலராலும் எட்டாமுடியாத இடத்திற்கு சென்றனர். 2010 ஆம் ஆண்டு மல்லையா காலெண்டரில் இடம் பெற்ற சோனாலி ராவுத் பிக் பாஸ் சீசன் 8ல் தோன்றினார். அதேபோல் கிங்பிஷர் காலெண்டரில் இடம் பிடித்த லிசா ஹெய்டன் (2011), ஆஞ்சலா ஜான்சன் (2011), சாயாமி கேரா (2012), ஐஸ்வர்யா சுஷ்மிதா (2016) ஆகியோர் மாடலிங் மற்றும் சினிமாவில் புகழ்பெற்றனர்.

58
ரகசியம் சொன்ற விஜய் மல்லையா

இந்த நிலையில் விஜய் மல்லையா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கிங்பிஷர் காலெண்டருக்கா மாடல்களை தேர்ந்தெடுத்தது குறித்து மனம் திறந்துள்ளார். கிங்பிஷர் சுவிம்சூட் காலெண்டருக்காக மாடல்களை எப்படி தேர்ந்தெடுத்தனர் என்பது பற்றி விரிவாக பேசிய மல்லையா,இதில் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைஃப் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களையும் குறிப்பிட்டார்.

68
"சரியான பெண்களை தேர்ந்தெடுத்தோம்"

நாங்கள் சரியான பெண்களை தேர்ந்தெடுத்தே கிங்க பிஷர் காலெண்டர் வெற்றிக்கு காரணம் என்றும் நாங்கள் சரியான டேலண்ட்களை தேர்ந்தெடுத்ததால் அது தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் யாராக இருந்தாலும், அவர்கள் எல்லாரும் நட்சத்திரமாக உயர்ந்தனர் எனவும் மல்லையா தெரிவித்தார். அந்த காலெண்டர்கள் கிங்பிஷர் பிராண்டுக்கு மிகப்பெரிய விளம்பர சாதனமாக இருந்தது எனவும் மல்லையா கூறியுள்ளார்.

78
உடைத்து பேசிய தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே 2009 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் ஒன்றில், கிங்பிஷர் காலெண்டரில் பங்கேற்றது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முன்னேற்றமாக இருந்தது என்றும் சர்வதேச அளவில் இது போன்ற சிறப்பான காலெண்டர் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

88
மனம் திறந்த மல்லையா

பல மோசடி வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, இப்போது இந்தியாவுக்கு வெளியே உள்ள விஜய் மல்ல்யா, இந்நிகழ்ச்சியில் தனது பார்வைகளையும், கிங்பிஷர் பிராண்டின் வணிக உத்திகளைப் பற்றியும் விளக்கினார். இந்த செய்தி, மாடலிங் உலகின் பின்னணி, விளம்பரத்தின் சக்தி மற்றும் வெற்றிக்கான துடிப்பை பிரதிபலிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories