சீனா முக்கிய உர வகைகளின் ஏற்றுமதியை இந்தியாவிற்கு திடீரென நிறுத்தியுள்ளது. இது இந்திய விவசாயத்தைப் பாதிக்கக்கூடும் என்றாலும், மாற்று நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
2025-ம் ஆண்டின் முக்கியமான கரீப் பருவத்திற்கு முன்பாக, சீனா இந்தியாவுக்கான சில முக்கிய உர வகைகளின் ஏற்றுமதியை திடீரென நிறுத்தியுள்ளது. இது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம் எதுவும் சொல்லாமல் இந்தியாவுக்கான உரம் மட்டும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா தவிர மற்ற நாடுகளுக்கு சீனா உரம் ஏற்றுமதி செய்து வருகிறது.
28
பாதிப்படையும் பயிர்கள் யாவை?
சாதாரணமாக இந்திய விவசாயம் அதிகம் பயன்படுத்தும் யூரியா அல்லது டி.ஏ.பி உரம் இல்லாமல் போனால், எளிதில் மாற்றுப் பொருள் கிடைக்கும். ஆனால் சீனாவால் தடைசெய்யப்பட்ட உரங்கள், Micronutrient சத்துக்கள் அதிகமுள்ள நீரில் கரையும் உரங்கள். இவை பழங்கள், காய்கறிகள் மற்றும் உயர்தர பயிர்களுக்கு முக்கியமானவை. அதனால், இந்த தடை வேளாண்மையை நேரடியாக பாதிக்கக்கூடும்.
38
உரம் இறக்குமதிக்கான புதிய ஒப்பந்தங்கள்
சீனாவின் இந்த நேரடி தடைக்கு எதிராக இந்தியா நேரடி பதில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ரஷ்யா, மொரோக்கோ, கஃப்காஸ் போன்ற நாடுகளுடன் உரம் இறக்குமதிக்கான புதிய ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது.
அவசர நிலைக்கு உரம் Buffer Stock திட்டங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து உரம் விநியோக மேலாண்மையை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. இந்தப் பதிலடி நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் தடுக்கும்.
58
வணிக அழுத்தம்: சீனாவின் புதிய ஆயுதம்?
சீனா இது முதல் முறை அல்ல இந்தியாவுக்கு பொருட்கள் வழங்க மறுப்பது. சமீபத்தில் மின்னணு சாதனங்கள், பாதுகாப்பு உற்பத்திக்கு முக்கியமாக தேவைப்படும் Rare Earth Magnets-ஐ இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தியது. இவை அனைத்தும் தனிப்பட்ட வாணிக நடவடிக்கைகள் அல்ல, மாறாக தீவிர அரசியல் அழுத்தங்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
68
"ஆத்மநிர்பர் பாரத்" – சுயமாக நம்மை உருவாக்கும் திட்டம்
மத்திய அரசு, விவசாயம், பாதுகாப்பு உற்பத்தி, மின்னணு உற்பத்தி, மருத்துவ சாதனங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீனாவின் இந்த உர தடை, இந்த சுயசார்பு முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது.
78
விவசாயிகளை பாதுகாக்க அரசு முன்னெச்சரிக்கை
விவசாயிகள் பதற்றம் கொள்ள தேவையில்லை. உரக்கான வதந்திகளை நம்பாமல், உத்தியோகபூர்வ தகவல்களை மட்டுமே நம்பவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாற்று நாடுகளிலிருந்து உர இறக்குமதி, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு, உர விநியோக கட்டுப்பாடு இவற்றை விரைவாக செயல்படுத்தி, விவசாயிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
88
இந்தியாவை பாதிக்காது
சீனாவின் இந்த உர தடையால் இந்திய விவசாயம் தடுமாறாது. மாறாக, இது நம்மை மேலும் சுயசார்பாகவும், வலிமையாகவும் மாற்றும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்தியா, தனது உணவு மற்றும் வேளாண்மை பாதுகாப்பை கையிலே எடுத்து, அரசியல் அழுத்தங்களுக்கு எதிராக உறுதியாக செயல்படுகிறது. உர விஷயங்களில் பரபரப்பான செய்திகளை நம்ப வேண்டாம். உங்கள் பகுதி வேளாண்மை அலுவலகத்திடம் உறுதி செய்து செயல்படுங்கள். அரசு உங்களுடன் இருக்கிறது.