என் மீது கை வைத்தால்! 35 துண்டுகளாக வெட்டி விடுவேன்! ஃபர்ஸ்ட் நைட்டில் மிரட்டிய மனைவி! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Published : Jun 26, 2025, 12:50 PM IST

திருமணமான முதலிரவில் கணவனை கத்தியைக் காட்டி மிரட்டிய மனைவி. தன்னைத் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்ததால் கணவன் அதிர்ச்சி.

PREV
14
தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன்

மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், ஆந்திராவில் கூலிப்படையை ஏவி கணவனை மனைவி தீர்த்து கட்டிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற போது கணவனை என்னைத் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என்று மனைவி மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

24
பெற்றோர் முன்னிலையில் திருமணம்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த ஏடிஏ காலனி பகுதியைச் சேர்ந்த கேப்டன் நிஷாத் (26) என்பவருக்கும், கர்ச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சிதாராவுக்கும் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளுடன் சென்ற முதலிரவு அறைக்கு சென்ற நிஷாத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

34
படுக்கை அறையில் கையில் கத்தியுடன் மணமகள்

அங்கு சிதாரா படுக்கை அறையில் கையில் கத்தியுடன் இருப்பதை பார்த்த நிஷாத் அதிர்ச்சியடைந்தார். சித்தாரா, முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். முதலிரவைக் கொண்டாட அமனுக்கு மட்டுமே உரிமை உண்டு என மிரட்டியுள்ளார். பெற்றோர் வற்புறுத்தியதால் தான் மட்டுமே உன்னை திருமணம் செய்துகொண்டேன் என்றார். உயிருக்கு பயந்து நிஷாத் அந்த இரவு முழுவதும் தூங்கவில்லை. இது தொடர்ந்து 3 நாட்களுக்கு நடந்துள்ளது.

44
சுவர் ஏறி குதித்து ஓடிய பெண்

இதனால் மன அழுத்தத்தில் இருந்த நிஷாத் வேறு வழியில்லாமல் நடந்த சம்பவத்தை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சித்தாரா மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர் சமரசம் பேசி நிஷாத்துடன் வாழும் படி கூறியுள்ளனர். இருப்பினும் சித்தாரா, நிஷாத் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிச் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories